இலையேல் என் பெயரை வெட்டிவிடு
சுதா சுவிஸ்
என் பிரியமானவளுக்கு!!
பல பிரயத்தனங்களில் பிரசவமாகிய!
உன் மடல் என் கரத்தில்.!
சம்பிரதாயமாக நன்றி என எழுதிவிடவா?!
ஆயினும் நன்றிகள்!
!
நான் நலம் என்று எழுதிவிட!
நல்லவைகள் என்று அதிகமாய் எதுவுமில்லை.!
முன்பு எழுதியதைப்போலவே!
மிரட்டலாய் இடையிடையே தொலைபேசி அழைப்புக்கள்!
மனத்திற்கு அடிக்கடி தொல்லைகள் தந்தபடி.!
!
ஆயினும், நினைவுகளுக்குமட்டும்!
இன்னும் இறகுகள் முளைத்தபடி.!
உன் நினைவுகளும் என் இறகுகளாய்!
என்னோடு ஊர்வலம் வந்தபடி.!
நடை பாதைஓரத்தில் நாற்காலி,!
என் எண்ணங்கள் அடிக்கடி உட்கார்ந்து!
உன் சுவாசங்களை உள்ளிழுத்துக்கொள்கிறது.!
எதுவுமே வெறுமையாய் சிலவேளைகளில்!
அந்தக் கத்தாப்பு மரத்தின் பரந்தகிளைகளின் இடையில்!
நாம் களவுபோன கதைகள்!
ஒற்றைக்கிளையிற்குள் ஒழிந்துதிருந்தவைகள்!
மரத்தில் பட்டை உரித்து!
பெயர் வெட்டி அழகுபார்த்தவைகள்!
இன்னும் மனத்திற்குள் சுகமானவையாய்!
!
கத்தாப்பு மரத்திற்கு தண்ணீருடன்!
கண்ணீரும் ஊற்றுவதாய் கடிதம் துளிர்த்திருந்தது,!
என் மனதில் பனிப்பாறையாய் உறைந்து வளர்கிறது.!
என் மனப்பெருமூச்சின் சுவாலையில்!
உன் நினைவுகள் தென்றலாய் இடையிடையே!
என் வாசத்தில் வாசல்கதவுகளைத் திறக்கிறது.!
சமுத்திரத்தின் ஓரத்தில் அழகுதமிழ் எழுதிய பொழுதுகள்!
அலை எழுந்து அதை ரசித்து பொழுது!
நீ அழுது வடித்த கண்ணீர் என் விழியிற்குள்!
இன்னும் திரண்டு இமைகளின் இடுக்குகளில் இறுகியது.!
என் இதயத்தை இறுக்கியபடி!
இப்போதெல்லாம்.!
உன் அண்ணாவின் கனவுகளும் கடிதத்தில்..!
அவனின் கரங்களின் வலிமையை!
கனமான வார்த்தைகளில் விதைத்திருந்தாய்.!
என் விழுதுகளை மட்டுமல்ல வேரையும் விறகாய்!
காயப்பட்ட கதைகள் என் நினைவினில் முளைக்கிறது.!
!
முன்பு என் நண்பர்களுக்காய் வாகனம் ஓட்டிய!
உன் வீட்டின் எதிர் வீட்டு ராசன்!
கோரமாய் கொல்லப்பட்ட சேதியை!
சிறிதாய் எழுதியிருந்தாய், வெறும் செய்தியாய்.!
என் கனவுகளில் கறையான் முளைப்பது போல..!
உணர்வுகள் பிய்ந்து கந்தலாவதுபோல்..!
ஏதோ ஒன்று என்னுள் எழுந்து விழுகிறது.!
இழுத்து இழுத்துப்பிடிக்கிறேன்.!
இதயம் ரணவேதனையில் துடிக்கிறது.!
கலைத்து காயப்படுத்தியதும்!
வீதிகள் தோறும் அனாதைப்பிணங்களாய்!
கொல்லப்பட்டு கொழுத்தப்பட்டதும்!
மறப்பதற்கு வெறும் இரவுக் கனவுகளல்ல.!
மனத்தில் மாறாத வடுக்களின் தழும்புகள்!
முகத்தினில் ஓங்கி வீசப்பட்ட அவலட்சணங்கள்.!
!
இவைகள் அறிந்தும் மறந்து வாழும் மனிதரில்!
நீயும் ஒருத்தியென்றால்!
உன் அண்ணனின் கரங்கள்!
நியாயத்தின் நிதர்சனமென்றால்!
கொல்லப்பட்ட ராசன் தேசத்தின் துரோகியென்றால்!
நீயும் நானும் பேசிய வார்த்தைகள்!
அர்த்தங்கள் இல்லாத அஸ்திகள்.!
வாய்கள் மூடப்பட்டிருந்தாலும்!
நெஞ்சினில் நீதியைத்தான் எதிர்பார்த்தேன்.!
உன் பார்வை, கொடுமையை கொழுத்த வேண்டுமென்றேன்.!
வளர்ச்சியில் பொதுமையின் கருத்துக்கள்!
எழுச்சி பெற வேண்டுமென்றே நினைத்திருந்தேன்.!
என் காதல் என்பது!
வெறும் கல்யாணச்சடங்கிற்காய்!
எழுதப்படும் ஒப்பந்தமல்ல..!
கருத்துக்களுடனேயே கரத்தை இணைக்க விரும்புகிறேன்.!
ஏற்றுக்டகொணடால் இன்னொரு கடிதம் எழுது.!
இல்லையேல் கத்தாப்பு மரத்தில்!
என் பெயரை வெட்டிவிடு.!
சுதா சுவிஸ்