குடையெடுத்துப் போகாததற்காய்!
திட்டிக் கொண்டே!
முந்தானையில் தலைதுவட்டி!
வெதுவெதுப்பாய்த் தருவாள்!
ஒரு கோப்பைத் தேநீர்!
பின்னிரவில் நடுக்கமேறி!
தகிக்கும் உடலை!
கனத்த போர்வையால் மூடி!
அரைத் தூக்கத்துடன்!
விடியலுக்காய் காத்திருந்தாள்!
உழுது கொண்டிருந்த!
நிலத்திருந்து வெளியேறும்!
புழு பூச்சிகளை!
அங்குமிங்கும் பறந்தபடி!
மைனாக்களும் காக்கைகளும்!
மேய்ந்து கொண்டிருக்க!
மரத்திலிருந்த கரிச்சான் குருவிகளோ!
அவ்வப்போது பறந்து பறந்து!
தாழப் பறக்கும் தட்டான்களை!
இலாவகமாய்ப் பிடித்துண்பதையும்!
கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே!
சுணக்கத்தோடு நடப்பேன்!
அம்மாவுடன் அரசு மருத்துவமனைக்கு
அ. விஜயபாரதி