மறந்தே போனதடா!!!
தலை சுற்றும் வாந்தியும்!
தள்ளாடும் மயக்கங்களுமாய்;!
நான் கடத்தின!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
விரும்பிய உணவுகள்!
எதிரிலே இருந்தும்!
உனக்கு ஒவ்வாது என்பதால்!
உண்ண முடியாத!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
நேராக படுத்தால்!
உன்க்கு ஆகாது என்பதால்!
ஒருக்களித்து படுத்தே!
ஒரு பக்கம் முழுவதும்!
வலியினைப் பெற்ற!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
தாய்மை அடைந்ததில்!
பயணம் செய்யக்கூடாது -என்று!
என் தாய்வீடு செல்ல முடியாமல்!
பரிதவித்த!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
தலைவலி, காய்ச்சல்!
எது வந்தாலும்!
மாத்திரைகள் கூடாது என்பதால்!
நோயோடு பழகி குணமான!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
நீ இந்த உலகை!
காண விரும்பி அவதரித்த -அந்த!
வேதனை நிறைந்த!
அந்த நிமிடங்கள்!
மறந்தே போனதடா!!!
என் எல்லா வலிகளும்!
உன் புனிதமான!
இந்தச் சிரிப்பினால்...!
ஷீ-நிசி
ஷீ-நிசி