ஏனிந்த வஞ்சனை.. படைகள் இல்லாத
கிரிகாசன்
(இலங்கையில் அகதிகள் முகாம் என்ற பெயரில் முள்வேலி நாற்புறமும்!
போட்டு துப்பாக்கி பிடித்த இராணுவக் காவல்சிறைக்குள்ளே இருக்கும் !
ஒரு தமிழ் சிறுவன் பாடுகிறான்)!
!
01.!
ஏனிந்த வஞ்சனை இறைவா?!
----------------------------------- !
ஏனிந்த வஞ்சனை இறைவா?!
சுற்றிவந்து தொட்டுப்போகும் காலைத் தென்றலே - உன்னை!
கட்டிவைத்து கால்விலங்கு போட்டவர் உண்டோ!
நெற்றிமீது பொட்டுபோன்ற வட்ட நிலாவே - உன்னை!
நிற்கவைத்து வேலிபோட்டு விட்டதும் உண்டோ!
சுற்றிமுள்ளுக் கம்பிபோட்டு கூடுகட்டியே - எம்மை!
வைத்திருப்ப தென்ன வென்று தெரியவில்லையே!
விட்டுஇதை வெளியில் சென்று கத்திகூவியே!
நாமும்பெற்று விட்டோம் ஈழமென்று பாடவேண்டுமே!
வண்ணப் பூவில் வந்திருக்கும் வண்டுமாமாவே!
வாழ்க்கைஎன்ன வென்றுசற்று சொல்லி போங்களே!
விண்ணின்மீது ஓடிச்செல்லும் வெள்ளி மேகமே!
விட்டது யார் வெளியிலென்று சொல்லிதாங்களே!
எட்டஉயர் வான்பறக்கும் சிட்டுக்குருவியே - உங்கள்!
செட்டைதன்னை எங்குபெற்றீர் எனக்கும் தாங்களே!
நட்டநடுவானில் நானும் பறந்து சுற்றுவேன் - இந்த!
நரகவாழ்வை விட்டுநானும் மகிழ்ச்சி யாகுவேன்!
கண்ணில்நீரைத் தள்ளிஏதும் கண்டது மில்லை!
காலில்போட்ட சங்கிலியாய் விடுதலை இல்லை!
மண்ணில்ஏது பாவம்செய்தேன் மனசு நோகுது!
மாறிவேறு ஜென்மம் கொள்ள ஆசைபொங்குது!
இடியிடித்து மழைபொழிந்தால் பூமிக்கு இன்பம்!
இரவுமாறி பகல் எழுந்தால் பூக்களுக் கின்பம்!
குடிகெடுத்து பார்ப்பதிந்த கயவருக் கின்பம்!
விதிபிழைத்த எனக்குமட்டும் ஏன்இந்த துன்பம்!
மதிசிறுத்த விலங்கைக்கூட அடைத்து வைப்பவர்!
மாலைகாலை என்றுவெளியில் மேயச் செய்கிறார்!
கதிசிறுத்த தமிழர்எம்மை அடைத்து வைத்ததும் அன்றி!
காக்கிஉடை காவல்கொண்டு சுற்றி நிற்கிறார்!
அழகுமலர் வாசம்கொண்டு ஆடி வந்திடும்!
அச்சமின்றி வீசிவந்து அணையும் தென்றலே!
பழகிவந்த உலகிலெங்கும் இறைவன் கண்டீரேல்!
பார்த்துஇந்த பாலன்தந்த சேதி சொல்லுவீர்!
கொடுமைபாவம் குற்றம்கொள்ளை செய்யும் கொடியவர்!
கூடிஆடி இன்பவாழ்வு கொண்டு மகிழ்கிறார்!
வறுமைநீதி தருமம்உண்மை பேசும் நல்லவர்!
வாழ்வுமட்டும் நரகமாகிப் போனதென்னவோ?!
விதியைஎழுதும் உனதுகைகள் எமது தலையினில்!
விடை தெரியா கணக்கெழுதி விட்டதும் ஏனோ!
பொதுமுறைமை மனிதம் நீதி விதிகள்இன்றியே!
போனபோக்கில் உலகைசெய்து சுழலவிட்டாயோ!
தமிழன்மேனி மற்றினங்கள் ஏறி மிதிக்கவே - வெகு!
சொகுசுஎன்று எழுதிவைத்த தேனோ ஆண்டவா!
அமிழ்துஎடுத்த போதுகண்டம் நின்ற நஞ்சுதான் - உன்!
உடல்முழுக்க பரவிஇந்த மோசம் செய்ததோ!
!
02.!
படைகள் இல்லாத ஊரொன்று வேண்டும்!
-----------------------------------------------!
(இராணுவக் காவல்சிறைக்குள்ளே இருக்கும் ஒரு தமிழ் இளைஞன் பாடுகிறான்)!
படைகள் இல்லாத ஊரொன்று வேண்டும்!
இலைமீது தழுவி குளிரோடு இழைந்து!
முகம்மீது படர்ந்தோடும் காற்றே - உன்னை!
அலையாது நில்லு எனக்கூறி வேலி!
தடைபோட்டு மறித்தாரும் இல்லை!
கரைமீது மோதும் அலையாரே சொல்லீர்!
கடல்மீது ஒருவேலி கட்டி!
உருளாதே என்று ஒருநீதி கண்டு!
தடுத்தாரும் எங்கணுமில்லை!
மலைமீ தொழிந்து மறுநாளில் வந்து!
உலகோட சுழன்றோடும் நிலவே!
கருவானில் யாரும் கரம்நீட்டி உன்னை!
சிறை போட்டு கொண்டதோ சொல்லு!
ஒருபாவம் அறியா தமிழான என்னை!
ஓடாதே என்று கால்கட்டி!
பெருவேலி யிட்டு கடுங்காவல் செய்து!
சிறையாக்கி வைத்ததேன் சொல்லு!
விரிவானில் காற்றில் விரைந்தோடும் குருவி!
எனவாகிப் பறந்தோட வேண்டும்!
முகிலாகி வானில் மிகிழ்வோடு நீந்தும்!
முழுதான சுதந்திரம் வேண்டும்!
குழலூதி மலரில் குறுந்தேனை யுண்டு!
புவிமிது உலவிடும் வண்டும்!
கனிதேடி ஓடி மரந்தாவும் அணிலும்!
காண்கின்ற அகிலமே வேண்டும்!
ஒருநாடு வேண்டும் அதில்நாங்கள் மீண்டும்!
குதித்தாடும் சுதந்திரம் வேண்டும்!
தெருவீதி யெங்கும் செறிவான படைகள்!
நிற்காத ஊரொன்று வேண்டும்!
வயலோரம் சென்று கதிர்நீவி நின்று!
பயமின்றி மகிழ்தாட வேண்டும்!
இரவாகி வந்தும் எழிலான மங்கை!
தனியாக அகம் திரும்பவேண்டும்!
தருவார்கள் என்று தனிஈழ அரசு!
அமைகின்ற திசைநோக்கி நின்றோம்!
பெருவாழ்வு மீண்டும் வரும்ஆசை கொண்டு!
விடியாதோ என் ஏங்கி நின்றோம்!
உலைபோன அரிசி சோறாகி எங்கள்!
இலைமீது விழுகின்ற வரையில்!
உடலோடு ஒன்றாய் உயிர்சேர்ந்து நின்று!
பிணமாகா விதிஒன்று வேண்டும்