இதயமே இல்லாத இரத்த உறவுகள் - அரசி

Photo by FLY:D on Unsplash

இதயமே இல்லாத இரத்த உறவுகள்!!.....அடங்கி போக... அடிமைகள் இல்லை நாம்!!!!
!
01.!
இதயமே இல்லாத இரத்த உறவுகள்..!!!
----------------------------------------!
பணத்திற்கும் பகட்டிற்கும்!
பல் இளிக்கும் கூட்டம்...!!
பந்தா காட்டி பழகுவதும்..!
பச்சோந்தி தனமாய் உரு மாற்றுவதும்!
முதன்மை குணங்களாம்..!!!
இமயமாய் இடுக்கண் வருங்கால்..!
இழிமொழி கொண்டு வைய்ந்திடும்!
இரு வேடமிட்ட இரத்த உறவுகளாம்!
இவர்கள்...!!!!
இரத்தத்தினை உறிஞ்சிடும் உறவுகள்!
இரத்த உறவுகள் தானோ...!
இரு வதனம் கொண்டு!
இன்பமாய் மலர்ந்து பேசி,,!
இரண்டகம் செய்து குந்தகம் விளைவிக்கும்!
இரணியர் கூட்டமன்றோ..??? !
நெஞ்சத்திலே வஞ்சம் சேமித்து - எமக்கு!
பஞ்சம் வரும் போது கொஞ்சம்!
இனம் காட்டிடுவர் - தம்!
இரும்பு நெஞ்சமதை!
இருப்பதை கொடுத்தாலும்...!
இல்லாததை இல்லை என்றாலும்,,!
இடித்து பேசிடும் பொல்லாத கூட்டம்...!!!
இதயமே இல்லாத இரத்த உறவுகள்..!!!
இப்படி ஒரு உறவு!
இருந்தால் என்ன...???!
இறந்து தான் போனால் என்ன...???!
!
02.!
அடங்கி போக... அடிமைகள் இல்லை நாம்..!!!!
------------------------------------------------------!
நாலாம் மாடியில்!
நான்கு திங்களாய்!
நா வறண்டு கிடக்கின்றோம்..!!!
நாயினை ஒத்து.... இல்லை!
நாய் கூட சுதந்திரமாய்..!!
!
நாதியற்று(சொந்தங்களின்றி)!
நாமில்லை..!!
நாதியற்ற(கேட்பாரற்ற) இனமென்பதாலோ..??!
நான்கு சுவருக்குள் நாம்..!!!
நாட்டினை ஆளும் இனம்!
நாலா புறமும் சேவையில்..!!
நாளை விடியுமா - நீண்ட!
நாளாக இதே ஏக்கம்..??!
!
அடைத்து வைத்து!
அழகு பார்க்கின்றார்கள்..!!!
மோத விட்டு எம் வீரத்தை பார்க்க..!
மோதி வெற்றி வாகை சூட..!
வீறு இல்லை இந்த!
வீணர்களுக்கு...!!
நிர்வாணத்தை எத்தனை நாட்களுக்கு!
நின்று நின்று ரசிப்பாய்..??!
!
பொங்கி வரும் உதிரம்...!
பொத்தி இறுக்கும் எம் கரங்களால்,,!
பொறுமையாய் அடங்கி போகின்றது..!!!
கொப்பளிக்கும் கோபம்... !
அதரங்களை(உதடுகளை) துண்டிக்கும் - எம்!
கொலை வெறிப்பற்களின் நற நறப்பால்!
கொஞ்சம் தூரமாய் பயணிக்கின்றது..!!!
!
அரக்கர்களே..!!!
அதிகமாய் !
அடங்கி போக...!
அடிமைகள் இல்லை நாம்..!!
அடங்க மாட்டோம்... !
அதிக தினங்களுக்கு..!!
அதனால்..!
அப்புறமாகி போய் விடுவீர்..!!
அரவமின்றி(நிசப்தமாய்)...நீவிர்
அரசி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.