வேலிக்கருவை மர இலைகளும்!
கருவேல மரப் பூக்களும்!
கீரைப் பொரியலாய்!
கொட்டாங்குச்சியில்!
மணத்துக் கொண்டிருக்கும்!
இளம்பிராயத்தில் எழுப்பிய!
மணல் வீட்டுக்குள்!
எப்போதாவது!
கோயில் ஆலமரத்தில்!
குடியேறும்!
வழிதவறிய குரங்கிற்கு!
மிளகாய்ப் பொடி தூவிய!
வாழைப்பழத்தோடு!
காசுக்கு வாங்கிய நாவல் பழங்களைத்!
தின்றத் கொடுத்து!
அதன் மலத்தில் நெளியும்!
புழுக்களில் உணர்ந்தோம்!
கீரிப்பூச்சிகளின் நச்சரிப்பை!
வாகை மரங்களுக்குத்!
தலைகால்!
புரிவதில்லை போலும்!
பூக்களையே!
குஞ்சங்களாய் சூடியிருந்தவை!
இலையுதிர்த்து விட்டு!
காற்றின் நட்டுவத்திற்கு!
ஜதி செய்து கொண்டிருக்கிறது!
தலையில் சலங்கையணிந்தபடி!
ஆண்டாண்டு காலமாய்!
நிழற்கிளை விரித்து!
இனிக்கும் பழங்களை உலுக்கிய!
பாதையோரப் புளியமரத்தை!
வெட்டிய பள்ளத்தில்!
மழைநீர் தேங்கும்!
கோடையில்!
வெயில் வேரூன்றி!
வெக்கை பரப்பி நிற்கும்!
புங்கமரம்!
பூத்துக் குலுங்கியதால்!
உதிர்ந்த மொட்டுக்களை!
ஆட்காட்டி விரலசைத்து!
நட்சத்திரமெண்ணுவது போல!
ஒன்றிலிருந்தே மீண்டும் மீண்டும்!
தொடங்குகிறேன்!
ஒரு பகல்கனாவில்!
மல்லாந்து படுத்தபடி!
நிழலில் மட்டும்!
கசப்பை இறக்கி வைக்காத!
வேப்பமரக் கிளைதனில் !
நித்தம் நண்பகல் வந்தமரும்!
இரு மைனாக்கள்!
உடல் சிலிர்ந்து இறகு கோதி!
ஒருவித லயத்தில் சப்தித்தவை!
இன்றெந்தன் சாளரத்தில்!
வாசம் பண்ணவில்லை!
சாரல் கதவாயிருக்கிறது!
அணிலின் நகங்களும்!
காற்றின் விரல்களும்!
கொய்து தரையிலிறைத்த !
மஞ்சள் கொன்றைகளைப்!
பார்க்கும் கணம்!
எவளொருத்தியின் நினைவில்!
விளக்கமாறு வரவில்லையோ!
அவளுடன் நான்!
தண்டவாளங்கள் சந்திக்கும்!
மாயப்புள்ளியில்!
தாயம் ஆடிக் கொண்டிருப்பேன்!
அ. விஜயபாரதி

அ. விஜயபாரதி