எல்லாமே மிக இயல்பாய் உள்ளன.!
எதை வேண்டுமானாலும் !
தெரிவுசெய்யலாம்.!
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது.!
இன்று இருப்பதும் !
நாளை இருப்பதைத் தீர்மானிப்பதும் !
மிக எளிதாயிருக்கிறது.!
சாப்பிடுவது !
நடந்து செல்வது !
ஆட்களைப் பார்க்கும்போது!
எந்தச் சலனமுமில்லாது !
ஒரு விளையாட்டுப் பொம்மைபோல் !
பார்த்துக் கொண்டேயிருப்பது !
எல்லோரும் சிரித்து ஓய்ந்தபின் !
ஒப்புக்காக !
சிறு உதட்டுப் புன்னகையை !
காட்டிவிட்டுப் போவது!
எல்லாமே இயல்பாயுள்ளன. !
ஒரு கூரான கத்தியோ !
ஒரு நீளக் கயிற்றுத் துண்டோ!
ஒரு கிணறோ !
எனது தெரிவுக்கு மிகப் பொருத்தமானது.!
இறைச்சிக்காக கழுத்து இறுக்கப்பட்டு!
கதியாலில் தொங்கவிடப்பட்ட!
ஒரு கோழியின் !
செட்டையடிப்பின் பின்னான !
அமைதியும்… !
கூடவே கிடைத்துவிடும். !
எல்லாமே மிக இயல்பாய் உள்ளன.!
நான் எதை வேண்டுமானாலும் !
தெரிவுசெய்யலாம்.!
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது.!
!
-துவாரகன்
துவாரகன்