தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அன்னையைப் போற்றுவோம்

இ.ஜேசுராஜ்
( அன்னையர் தினம் - மே -8 ) !
அவளும் நானும் ஓருயிர் ஓருடல் - ஆம் !
நஞ்சுக்கொடி அறுபடும் முன்னே !
நானும் தாயும்! !
உதிரம் உறிஞ்சும் ஒட்டுண்ணியாய் !
எனது பிறப்பு ! !
மழலையாய் உன் மடியில் நான்! !
கொடி போட்டு முடித்துவைத்தாய் !
எனை உன்னுள்! !
நீர்ப்பையில் சுமந்தாலும் !
நெருப்பு தருணங்கள்தான் உனக்கு! !
கொடியசைத்து துவக்கமே !
உலக மரபு ஆனால் !
கொடியறுத்து துவக்கிவைத்தாய் !
கருவறை துவங்கி என் !
கல்லறைப் பயணத்தை! !
பயணம்வரை உன் !
பாதம் விழுவேன் !
பாசமுடன் ஆசியளிப்பாய்! !
இருந்தும் ஒரு வரம் தருவாய் !
இன்னொரு பிறப்பிருந்தால் !
தாயே !
உன் மடித் தொட்டிலுக்கும் !
மார்புக் கட்டிலுக்கும் !
மழலையாய் நான் மறுபடியும்! !
!
அன்னையின் ஆசிவேண்டி !
.இ.ஜேசுராஜ்

எமக்குள்ளே இடைவெளி

கொ.மா.கோ.இளங்கோ
யாத்வி- !
கவிதை மரபின் !
மோகப் பிழை !
சங்கீதம் கற்போம் !
எட்டாவது சுரம் !
நீ.. நெடில் அவள் !
உரசல்களுக்கு !
விடுப்பில்லை யினி !
இரவின் தொடர் சுற்று !
பத்துக்கும், ரெண்டுக்கும் !
இடைபட்டு !
கடக்கும் முள் !
முறியும் நேரம் !
பன்னிரண்டு !
கழுத்து சுற்றிய வட்டம் !
முத்தங்களின் !
பாசி மணி மாலை !
சுடர்- !
மங்கி,தொய்ந்து !
எரியும் !
உதடு ஊரும் எச்சில் !
அளவு தீராமல் !
விரல்கள் அணுகும் !
வீணை நரம்புகள் !
பாய்கிற பயம் !
எட்ட தாவி !
புதையுண்டு போகும் !
வெட்கம் !
கலகங்களின் சூட்டில் !
தணிகிறது !
உட் பருமன் !
ஆயிரம் கோடி !
இறகுகளோடு !
பட்டாம் பூச்சிகள் !
அடைபடும் தனியறை !
ஏகாந்த தேனடை !
எங்கேனும் !
வடிய வடிய கசியும் !
துளி ஏக்கம் !
அதற்கப்பாலும் !
எமக்குள்ளான !
இரவையுடுத்தி !
இடைவெளி !
மறைக்கிறோம்

ஒற்றை நட்சத்திரம்

புதியமாதவி, மும்பை
எங்கிருந்து வந்தது இந்த சூரியன்? !
என் பிரபஞ்சத்தின் நட்சத்திரமாய் !
நட்சத்திரங்கள் இல்லாத இருண்ட வானத்தில் !
மேகங்கள் தாண்டி !
மோகங்கள் விலக்கி !
எட்ட நின்று !
இரவல் வாங்காத !
இதமான வார்த்தைகளில் !
எழுத்துக்கூட்டி !
என் இருட்டை வாசிக்கிறது. !
!
தொடமுடியாத தூரத்தில் !
இருக்கிறது !
இருந்தாலும் !
தொட்டுச்செல்கிறது !
அந்த ஜீவனின் குரல். !
!
ஒற்றை நட்சத்திரம் !
போதுமா இருட்டுக்கு? !
நகைக்கிறது வானம். !
எப்படி புரியவைப்பேன்? !
முகம் தேடி அலையும் இருட்டில் !
எரியும் மெழுகுவர்த்தியிடம் !
காணாமல் போகிறது !
கண்கூசும் சூரியன் என்பதை. !
-- புதியமாதவி

உரையாடலின் வலி

அன்பாதவன்
ஒவ்வொரு முறையும் அறுந்து வீழ்ந்து!
துடிக்கிறதுன்னுடனான உரையாடல்!
வெட்டுண்டப் பல்லி வாலாய்!
ஒவ்வொரு முறையும்!
குறுக்கீடுகளால் தடைப்படுகிறது சந்திப்பு!
பாதி சமையலில் தீர்ந்த கேஸ் சிலிண்டராய்...!
ஒவ்வொரு முறையும்!
சிதைந்து சிதறுகிறது நேசவெளி!
கைத் தவறியக் கண்ணாடிப் பாத்திரமாய்!
கன்னத்து முத்தம் காய்வதற்குள்!
அவசரமாய் அழைக்கும் கைபேசி!
உயர்வாய்ப்படுகிறது!
என் தாப தாகங்களை!
மிருதுவாய் நிராகரித்த நீ !
கண்ணீ ரின் காரணங்களை!
நான் புரிந்துக் கொண்டதுப் போலவே!
உரையாடல்களின் !
அகால மரணங்களைக் காட்டிலும்!
மகோன்னதமன்றோ!
மவுனத்தின் இருப்பு

பட்டக் காலிலே படுமென் பார்

புலவர் சா இராமாநுசம்
பட்டக் காலிலே படுமென் பார்!
கெட்டக் குடியே கெடுமென் பார்!
பழமொழி சொன்னார் அந் நாளே!
பார்த்தோம் சான்றாய் இந் நாளே!
மீண்டும மீண்டும ஜப்பா னில்!
மிரட்டும் அதிர்வுகள பல ஊரில்!
வேண்டுவோம் இயற்கைத் தாயி டமே!
வேதனை செய்வதா சேயி டமே!
பட்டது போதும் அவர் துயரம்!
பறந்திட அங்கே பல உயிரும!
கெட்டது போதும் இனி மேலும்!
கெடுவது வேண்டா ஒரு நாளும்!
விட்டிடு பூமித் தாயே நீ!
விழுங்க திறவாய் வாயே நீ!
தொட்டது அன்னவர் துலங் கட்டும!
தொழில்வளம் முன்போல் விளங் கட்டும்!
உழைப்பவர் அவர்போல் உல கில்லை!
உண்மை முற்றிலும ஐய மில்லை!
தழைக்க வேண்டும் அவர் வாழ்வே!
தடுத்தால் உனக்கும அது தாழ்வே!
பிழைக்க அன்னவர் வழி காட்டி!
பூமித்தாயே கருணை விழி காட்டி!
செழிக்கச் செய்வது உன் செயலில்!
செழிப்பதும் அழிப்பதும் உன் கையில்!
அணுவால் அழிந்தும் மீண்ட வரே!
அவருக்கு நிகராய் உண்டெ வரே!
துணிவே அவருக்குத் துணை யாமே!
தொழிலில் அதுவே இணை யாமே!
அணுவே இன்றவர் முன் னேற்றம!
அடையச் செய்தது பெரு மாற்றம்!
பணிவாய் பூமித் தாய் உன்னை!
பாடி முடித்தேன பா(ர்) அன்னை

ரத்த வாசம்

கோ.புண்ணியவான், மலேசியா
மனித சிதலங்கள்!
கோயிலின் வெளிச்சுவரில்!
ஒட்டிக்கொண்டிருந்தது!
குருதி தோய்ந்த!
தொடைப்பாகமோ கைப்பாகமோ!
கைக்குழந்தையொன்று!
தாயைக்காணாமல்!
குண்டு விழுந்த!
பேரிரைச்சலாலோடு!
கதறியது!
சிவன் கோயிலில்!
பசியை விட்டகன்ற பதற்றம்!
மேவியிருந்தது மக்களிடம்!
“இறைவனைப்பிரார்த்தியுங்கள்” என்றார்!
குருக்கள் மூல மந்திரம் மறந்தவராய்!
எல்லாத்திசைகளையும் தீர்க்கமாக!
நோக்கிய!
M16 கனத்த டிரக்குகளில்!
கொலைவறியோடு கனன்று !
நீண்டிருந்தது!
கிளித்தட்டு டிய சிறார்கள்!
திசைமறந்தவாறு மறைவிடம்!
தேடிச் சிதறினர்!
குழந்தை முகம் தேடி!
தேவாலயத்தில்!
யேசு பெருமானை!
முழங்காலிட்டு!
ஜெபித்தனர்!
உலை வைக்க விறகுதேடிய!
தாய்மார்கள்!
பிள்ளைகளுக்காக!
நிலை மறந்து!
விரைந்தனர்!
பள்ளிவாசலில்!
என்றுமில்லாத கூட்டநெரிசல்!
தொழுகைகளில்!
அல்லாவை அழைத்தனர்!
மனித ரத்தத்தைக் கேட்கும்!
அசுரர்களென போர் விமானங்கள்!
ஐந்தாறு சுற்றுகள் முடிந்து!
பிறிதொருமுறையும்!
இரைதேடிப் திரும்பி வந்தன!
ஓர் இளஞன்!
தெருவில் பெரும்பீதியில்!
தலைதெறிக்க !
ஓடினான்!
“வரும் வழியில் குண்டு பாய்ந்து!
கடவுள் இறந்துவிட்டார்” என்று கதறியபடி !
!
-கோ.புண்ணியவான், மலேசியா

நடைபிணமாய் நடந்து

வி. பிச்சுமணி
அடர்ந்நத வெண்பனியில்!
எழு ஞாயிறு முழு நிலவாய்!
காட்சி பிழைசெய்த நாளில்!
திங்களில் ஞாயிறை!
காண தேநீர் கடையில்!
துவாரக பாலகனாய்!
காத்திருந்தேன்!
கடல்அலைகள் ஞாயிறை!
கரைந்திடுமா என்ன!
உன்னை காணவில்லை!
மேகம் மறைத்த!
இரவாய் வாடிபோனேன்!
சாரல் விழுந்த!
புள்ளி கோலமானேன் !
கல்லெறிந்த!
நீர் பிம்பமானேன்!
மழலையர் பள்ளி !
முதல்நாள் மழலையானேன்!
கூட்டத்தை விட்ட!
குருட்டு கொக்கானேன்!
புதிய மகிழ்ஊர்தியின்!
முதல் கீறலானேன் !
காடையர் குண்டு விழுந்த!
ஈழ பதுங்குகுழியானேன்!
என்ன செய்வதறியாது !
தீக்குளிக்கும் தமிழனானேன்!
இனி என்னவாவேன் என தெரியாது!
என்ன என்னமோ ஆனேன்!
வண்டிகாரன் தூங்கினாலும்!
பழகிய வண்டி மாடுகள்!
வீடு சேர்வது போல்!
நடைபிணமாய் நடந்து..!
-வி. பிச்சுமணி

பா நந்தனின் 2 கவிதைகள்

பா நந்தன்
தேடல் !
சாலையில் அடிபட்ட !
சாமானியன் ஒருவன், !
அவசரமாய்க் கடக்கும் !
ஒவ்வொரு முகத்திலும் !
தேடுகிறான் !
தான் என்றோ தொலைத்துவிட்ட !
மனிதத்தை!!! !
!
- பா நந்தன் !
!
யாரிடம்? !
!
அமெரிக்கனுக்கு அடாவடித்தனம் !
ஆங்கிலேயனுக்கு ஆணவம் !
இந்தியனுக்கு பேச்சு !
ஜப்பானியனுக்கு சுறுசுறுப்பு !
மற்றதெல்லாம் இருக்கட்டும் !
மானிடம் யாரிடம்? !
- பா நந்தன்

காற்றில் கலந்த – ஈழப் புரட்சி

வித்யாசாகர்
பொன்னம்மான்!
---------------------------------------- !
நீ சிரித்துப் பாடிய பாட்டெங்கே !
உன் சிரித்த முகமெங்கே !
நீ வளர்த்த வீரமிங்கே -!
கண்ணீர் விட்டழுகிறதே;!
உன் கருணை முகமெங்கே !
காற்றில் தீராத உன் பாடல் - தொலைந்துப் போனதெங்கே!
விடியாத ஈழ இருட்டில் மேலும் -!
நீ பிரிந்த சேதி வலிக்கிறதே;!
பெற்ற - தாய் காட்டுமுன் பாசமெங்கே!
கொதித்தெழுமுன் கோப துடிப்பெங்கே !
உயிர் மூச்சடிங்கி நீ போன தூரமாய் -!
நெஞ்சம் கனக்கிறதே; கனக்கிறதே;!
எந் தலைவனுக்குத் தந்த தோளெங்கே !
போர் கணைகள் படைக்கும் திறமெங்கே!
நீ பாடி வளர்த்த புரட்சியின் -!
மீதி நினைவுகள் மிஞ்சி எரிக்கிறதே;!
எம்; இந்திய முதல் பாசறை ஆண்ட துணிவெங்கே!
உன் வெடிமருந்து புலமை போனதெங்கே !
ஆயுதம் படைத்து நீ விட்ட ஆயுள் !
இருபது - வருடம் கடந்தும் சுடுகிறதே; சுடுகிறதே; !
உனை தேடிப் பார்த்த இடமெல்லாம் !
நீ இறந்த தடமே கிடைக்கலையே -!
நீ காற்றாய் கலந்த உண்மை மட்டும் !
வெடித்த - சப்தம் கூறி அடங்கியதே;!
காலம் கூறும் கதைகளையெல்லாம் !
வரலாறு எழுதிக் கொள்ளும்; கொள்ளட்டுமே!
ஈழதேசம் உள்ளவரை - பொன்னம்மான் !
இருப்பதாகவே உள்ளம் நம்பும்; நம்பட்டுமே! நம்பட்டுமே

ஈழத்து படுகொலையும் மீனவ

வித்யாசாகர்
ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!!
--------------------------------------------------------------------------------!
போன பாதி உசுர காக்க!
கடலை பார்த்து போன எங்க -!
மீதி உயிரை தின்ன நாயி -!
தெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான் திரியுது!!!
பாவம் மேல பாவம் சேர்த்து!
கடல் கடலா சுத்திவந்து!
தமிழன்; தலைய பார்த்து சுட்டது!
கேட்டா கடலில் - கோடு போட்டுக் காட்டுது!!!
எம் சிறகொடிக்கப் பாக்குது!
இனமருக்க பாக்குது -!
நன்றிகெட்டோர் உறவால - எம்!
கருவறுக்க துடிக்கிது!!!
தமிழனென்றால் ஏத்தமா!
திருப்பி யடிக்காத் - துச்சமா !
மொத்த தமிழர் எழுந்து நின்னா!
சிங்களந் தான் தாங்குமா?!
ஆறுகோடி தமிழனும்!
நூறு கோடி மனிதனும்!
சேர்ந்து செய்த கொலையடா!
மனிதமில்லா செயலுடா!!
கர்ப்பினியை சுடுவதும்!
மீனவனை கொள்வதும்!
துயிலம் இடித்துத் தகர்த்ததும்!
எவங் கொடுத்த தைரியம் ?!
நாம் சும்மா இருந்த மடமைடா!!
இரக்கம் இல்லா பிறவிகள்!
தமிழச்சி மானம் சிதைத்த கோழைகள்!
மண்ணு மேல கொடிய நட்டு -!
கடலை கூட கேட்குது தமிழனை வஞ்சகமா கொல்லுது!!!
ஆடும் வரை ஆடட்டும்!
அடிக்கும் வரை அடிக்கட்டும்!
தமிழன் சேரும் வரை சிரிக்கட்டும்!
ரத்தம் சுடும்வரை திமுறுடா;!
தமிழனை உன் ஆணவத்தால் எழுப்புடா!!!!
சிறகொடிச்ச பாவமும்!
முலையறுத்த கோபமும்!
ரத்தம் பாய விட்ட கொடுமை!
அத்தனைக்கும் பதிலுடா; திருப்பியடிக்கும் வழியடா!!!
ஆளுபவர் அழுவட்டும்!
இருக்கை மீது உறங்கட்டும்!
எழுந்து நிற்கும் இளைஞர் அணி -!
துணிந்து - மீனவனை காக்கட்டும்; ஈழத்தை மீட்கட்டும்!!!
--------------------------------------------------------------------------------------------------------!
குறிப்பு:-!
தனக்கொன்றும் தெரியாதென தலைதிரும்பி இருந்த!
ஒட்டுமொத்த தமிழகத்தையும் – ஈழத்து இழப்பின் பக்கம் திருப்பி!
என் உறவுகள் மடிந்து கொண்டிருந்த பேரழிவை உணர்த்த!
தன் உயிரையும் துச்சமென ஈந்த தியாகி சகோதரர் திரு. முத்துகுமார் அவர்களை நினைவு கொள்வதில் – பெருமை கொள்வதோடு அல்லாமல் -!
அவருடைய இனத்தின் மீதான இந்த அக்கறை, மொழியின் மீதான பற்று!
சமுகத்தின் மீதான பொதுநல உணர்வை நாமும் நமக்குள்ளும் நிறைத்துக் கொள்வோம்! !
என் கவிதையை படிக்கும் முன்பு தங்கள் அனைவரிடமும்!
ஒரு மன்னிப்பினை கோரிக் கொள்கிறேன்..!
வன்மம் உள்ள வார்த்தைகளை இதுபோன்ற கவிதைகளில் கையாளும் நிமித்தம் உள்ளது.!
பொதுவாக, நாய் என்றெல்லாம் எழுத நானே விரும்புவதில்லை -!
அதிலும் குறிப்பாக நாயிற்கு ஒப்பீடாக மனிதனை எண்ணுவதேயில்லை,!
என்றாலும் – என் மீனவ உறவுகள் இரக்கமின்றி கொன்று வீழ்த்தப்பட!
கதறி அழுத அந்த தாயின், மனைவியின், சகோதரிகளின் கண்ணீரை கண்டு துடிக்கையில் வந்து வீழ்ந்த வார்த்தைகளிது