பட்டக் காலிலே படுமென் பார் - புலவர் சா இராமாநுசம்

Photo by Salman Hossain Saif on Unsplash

பட்டக் காலிலே படுமென் பார்!
கெட்டக் குடியே கெடுமென் பார்!
பழமொழி சொன்னார் அந் நாளே!
பார்த்தோம் சான்றாய் இந் நாளே!
மீண்டும மீண்டும ஜப்பா னில்!
மிரட்டும் அதிர்வுகள பல ஊரில்!
வேண்டுவோம் இயற்கைத் தாயி டமே!
வேதனை செய்வதா சேயி டமே!
பட்டது போதும் அவர் துயரம்!
பறந்திட அங்கே பல உயிரும!
கெட்டது போதும் இனி மேலும்!
கெடுவது வேண்டா ஒரு நாளும்!
விட்டிடு பூமித் தாயே நீ!
விழுங்க திறவாய் வாயே நீ!
தொட்டது அன்னவர் துலங் கட்டும!
தொழில்வளம் முன்போல் விளங் கட்டும்!
உழைப்பவர் அவர்போல் உல கில்லை!
உண்மை முற்றிலும ஐய மில்லை!
தழைக்க வேண்டும் அவர் வாழ்வே!
தடுத்தால் உனக்கும அது தாழ்வே!
பிழைக்க அன்னவர் வழி காட்டி!
பூமித்தாயே கருணை விழி காட்டி!
செழிக்கச் செய்வது உன் செயலில்!
செழிப்பதும் அழிப்பதும் உன் கையில்!
அணுவால் அழிந்தும் மீண்ட வரே!
அவருக்கு நிகராய் உண்டெ வரே!
துணிவே அவருக்குத் துணை யாமே!
தொழிலில் அதுவே இணை யாமே!
அணுவே இன்றவர் முன் னேற்றம!
அடையச் செய்தது பெரு மாற்றம்!
பணிவாய் பூமித் தாய் உன்னை!
பாடி முடித்தேன பா(ர்) அன்னை
புலவர் சா இராமாநுசம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.