ஈழத்து படுகொலையும் மீனவ - வித்யாசாகர்

Photo by FLY:D on Unsplash

ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!!
--------------------------------------------------------------------------------!
போன பாதி உசுர காக்க!
கடலை பார்த்து போன எங்க -!
மீதி உயிரை தின்ன நாயி -!
தெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான் திரியுது!!!
பாவம் மேல பாவம் சேர்த்து!
கடல் கடலா சுத்திவந்து!
தமிழன்; தலைய பார்த்து சுட்டது!
கேட்டா கடலில் - கோடு போட்டுக் காட்டுது!!!
எம் சிறகொடிக்கப் பாக்குது!
இனமருக்க பாக்குது -!
நன்றிகெட்டோர் உறவால - எம்!
கருவறுக்க துடிக்கிது!!!
தமிழனென்றால் ஏத்தமா!
திருப்பி யடிக்காத் - துச்சமா !
மொத்த தமிழர் எழுந்து நின்னா!
சிங்களந் தான் தாங்குமா?!
ஆறுகோடி தமிழனும்!
நூறு கோடி மனிதனும்!
சேர்ந்து செய்த கொலையடா!
மனிதமில்லா செயலுடா!!
கர்ப்பினியை சுடுவதும்!
மீனவனை கொள்வதும்!
துயிலம் இடித்துத் தகர்த்ததும்!
எவங் கொடுத்த தைரியம் ?!
நாம் சும்மா இருந்த மடமைடா!!
இரக்கம் இல்லா பிறவிகள்!
தமிழச்சி மானம் சிதைத்த கோழைகள்!
மண்ணு மேல கொடிய நட்டு -!
கடலை கூட கேட்குது தமிழனை வஞ்சகமா கொல்லுது!!!
ஆடும் வரை ஆடட்டும்!
அடிக்கும் வரை அடிக்கட்டும்!
தமிழன் சேரும் வரை சிரிக்கட்டும்!
ரத்தம் சுடும்வரை திமுறுடா;!
தமிழனை உன் ஆணவத்தால் எழுப்புடா!!!!
சிறகொடிச்ச பாவமும்!
முலையறுத்த கோபமும்!
ரத்தம் பாய விட்ட கொடுமை!
அத்தனைக்கும் பதிலுடா; திருப்பியடிக்கும் வழியடா!!!
ஆளுபவர் அழுவட்டும்!
இருக்கை மீது உறங்கட்டும்!
எழுந்து நிற்கும் இளைஞர் அணி -!
துணிந்து - மீனவனை காக்கட்டும்; ஈழத்தை மீட்கட்டும்!!!
--------------------------------------------------------------------------------------------------------!
குறிப்பு:-!
தனக்கொன்றும் தெரியாதென தலைதிரும்பி இருந்த!
ஒட்டுமொத்த தமிழகத்தையும் – ஈழத்து இழப்பின் பக்கம் திருப்பி!
என் உறவுகள் மடிந்து கொண்டிருந்த பேரழிவை உணர்த்த!
தன் உயிரையும் துச்சமென ஈந்த தியாகி சகோதரர் திரு. முத்துகுமார் அவர்களை நினைவு கொள்வதில் – பெருமை கொள்வதோடு அல்லாமல் -!
அவருடைய இனத்தின் மீதான இந்த அக்கறை, மொழியின் மீதான பற்று!
சமுகத்தின் மீதான பொதுநல உணர்வை நாமும் நமக்குள்ளும் நிறைத்துக் கொள்வோம்! !
என் கவிதையை படிக்கும் முன்பு தங்கள் அனைவரிடமும்!
ஒரு மன்னிப்பினை கோரிக் கொள்கிறேன்..!
வன்மம் உள்ள வார்த்தைகளை இதுபோன்ற கவிதைகளில் கையாளும் நிமித்தம் உள்ளது.!
பொதுவாக, நாய் என்றெல்லாம் எழுத நானே விரும்புவதில்லை -!
அதிலும் குறிப்பாக நாயிற்கு ஒப்பீடாக மனிதனை எண்ணுவதேயில்லை,!
என்றாலும் – என் மீனவ உறவுகள் இரக்கமின்றி கொன்று வீழ்த்தப்பட!
கதறி அழுத அந்த தாயின், மனைவியின், சகோதரிகளின் கண்ணீரை கண்டு துடிக்கையில் வந்து வீழ்ந்த வார்த்தைகளிது
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.