தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இறந்தும் வாழ்வர்

இமாம்.கவுஸ் மொய்தீன்
இறந்தும் வாழ்வர்!!!
---------------!
வெற்றிக்களிப்பில் !
இலங்கை இராணுவம்!!
வீழ்ந்து விட்டனராம் !
தமிழீழ வீரர்கள்!!
சு.ப.தமிழ்ச் செல்வன்!
உட்பட அறுவரைக்!
கொன்றுவிட்ட !
இறுமாப்பு!!
விடுதலைப் போர்!
துவங்கிய காலம் முதல்!
இன்றுவரையிலும்!
எத்தனை ஆயிரம் !
தமிழர்கள் மாய்ந்தார்கள்!!
ஓய்ந்துவிட்டதா !
விடுதலைப் போர்!!
தமிழீழம்!!
காலத்தின் கட்டாயம்!!
தமிழ்ப் போராளிகளை!
இலங்கை அரசு !
இன்று கொல்லலாம்!
தெய்வம் !
நின்று கொல்லும் நாள்!
வெகுதொலைவில் இல்லை!!
தமிழ்ச் செல்வன்!
புதைக்கப் ப்டவில்லை!!
விதைக்கப் பட்டிருக்கிறார்.!
ஒர் தமிழ்ச் செல்வனைக் !
கொன்று ஓராயிரம் !
தமிழ்ச் செல்வர்களுக்கு !
வித்திட்டிருக்கிறது!!
சமாதானத்துக்குச் சாவுமணி!
அடித்திருக்கிறது !
இலங்கை அரசு!!
தமிழீழம்!
வீரர்களைப் பிரசவிக்கின்றது!!
அவர்களைத் !
தீவிரவாதிகளாக்குகிறது!
இலங்கை அரசு!!
எவரெவர் எதையெதை!
விதைக்கின்றார்களோ!
அதையதையே!
அறுவடை செய்வர்!!
சிங்களவர்கள்!
தமிழர்களுக் கெதிராய்!
அநீதியும் அக்கிரமங்களும்!
விதைத்திருக்கின்றனர்!!
அவர்கள் என்ன!
பெறுவார்கள்!
காலம் பதில் சொல்லும்!!
அநீதி அழியும்!!
அறம் வெல்லும்!!
நீதி நிலைக்கும் நீடிக்கும்!!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

உள்முகம்

அன்பாதவன்
என்னுள் என்னைத்தேடி !
தொடங்கினேன் ஒரு பயணம் !
இவ்வளவு இலகுவான முயற்சியாய் !
இல்லையது !
பாதைகள் முழுக்க இடைஞ்சல்களும் !
தடங்கல்களும் !
விலக்கித் தொடர்வது பெரும்பாடாக !
கண்டேன் விசித்திரங்களை !
விபரீதங்களுங்கூட !
அறியா உலகங்களுள் நுழைந்த போதில் !
காத்திருந்தன ஆச்சர்யங்கள்; அருவருப்பில் !
ஆத்திரமூட்டின சில !
ச்சே! இதுவும் நானா !
படிமக் கோப்ரங்கள் இடிந்து சிதைந்து !
கசப்பின் கசகசப்பினூடாக !
எப்போதாவது வீழ்ந்து சந்தோஷத் தேந்துளி !
இருள் சூழ்ந்த புதுத் தடத்தில் !
தொடர்வதென் பெருவழி உள்முகமாய் !
சலிப்பில் !
திரும்பிவர யத்தனிக்கையில் !
என்னைத் தெரிந்த நானின் இருப்பு !
எழுந்ததொரு பெருங்கேள்வியாய் !
என் முன். !
- அன்பாதவன்

அரசி

வெளிவாசல்பாலன்
மௌனத்தைக்கடப்பதற்கு!
வழியென்ன சொல்!
ஒரு கேள்விக்கும் !
அதன் பதிலுக்குமிடையில்!
அந்தரித்துக் கொண்டிருக்கும் !
கனவுப் பூ!
தன் நிறங்களின் மீது வரைகிறது !
திவ்ய வாசனையோடான !
ஆயிரமாயிரம் கதைகளை!
படித்தறிய மனமிருந்தால் சொல்!
மொழிபெயர்க்கலாம் அந்த ரகசியத்தின்!
ஈரமூறிய அன்பின் ஆதர்;சத்தை!
ஒரு காலம் கரைகிறது!
இன்னும் எத்தனை பொழுதுகள் !
இந்தத் தோணி !
கரையிலேயே !
கட்டப்பட்டிருக்கும்!
அக்கரை போக இக்கரையில் !
காத்திருக்கும் ஒரு பயணி!
கரையில் !
தனிமரத்;தின் மேலே வெயில்!
கீழே !
குளிரூற்றும் நிழல்!
தோணியிலும் மரத்திலும் மாறிமாறிப்பறந்து !
காதல் பெருக்கும் சிறு பறவைகளைக்கண்டாயா!
அவற்றின் குதூகலத்தைப் பார்த்தாயா!
ஒரு ராஜ்ஜியம் !
உனக்காகவே காத்துக்கிடக்கிறது!
-- வெளிவாசல்பாலன்

பல் ஈறுகளில் நெளியும் புழுக்கள்

துவாரகன்
எப்போதும் ஆவென்றபடி கிடக்கும்!
உன் வாயிலிருந்து!
புழுக்கள் நெளிவதை!
நானும் கண்டு கொண்டேன்.!
நூற்றாண்டுகளுக்கு முன்!
உன் தந்தையர் கடித்துச் சுவைத்த!
நரமாமிசத்தின் மீதியிலிருந்து!
உனக்கான புழுக்கள் உருப்பெற்றிருக்கின்றன.!
அழுகி வடியும் துர்முகத்தினூடே!
புண்களால் வழிந்தொழுகும் நிணத்தினூடே!
கற்றை கற்றையாய் எட்டிப் பார்க்கின்றன!
பற்களிலிருந்து வெளிப்படும் புழுக்கள்!
செத்துப்போன மிருகங்களின் உடல்களிலும்!
அழுகிப்போன பண்டங்களிலும்!
மூக்கைச் சுழிக்க வைக்கும் மலத்திலும்!
நான் கண்டு கொண்ட நெளியும் புழுக்களை!
இன்று உன் பல் ஈறுகளிலும்!
கண்டு கொண்டேன்.!
உன் கதையினூடேயும்!
உன் செயலினூடேயும்!
உன் நாவுக்கும்!
விரல்களுக்கும் அவை தாவுகின்றன!
கொஞ்சம் கொஞ்சமாய்!
எனக்கும் தொற்றிவிடுமோ என்று!
இப்போ நானும் அச்சம் கொள்கிறேன்.!
என் அப்பா, அப்பாச்சி கூட!
உன் தந்தையர் பற்களிலிருந்து!
முன்னரும் புழுக்கள் நெளிந்ததைக்!
கண்டு கொண்டதாகச் சொன்னார்கள்.!
நூற்றாண்டுகள் கழிந்த பின்னும்!
நரமாமிசம் தின்ற வாயை!
தண்ணீர் விட்டுக் கொப்பளிக்க!
இன்னுமா உனக்குத் தெரியவில்லை?!
ஆறாத புண்ணிலிருந்து!
உற்பவிக்கும் வெள்ளைப் புழுக்கள்!
இனி, முல்லைப் பல் காட்டிச் சிரிக்கும்!
உன் குழந்தைக்கும் தொடர வேண்டாம்

வேப்பம் பூக்கள்

ப்ரியன்
தென்றலுக்குக் கூட !
ஏராளமான பூக்களை !
அள்ளி உதிர்க்கிறது !
அவ்வேப்பமரம்! !
!
என்றாலும், !
சிலப்பூக்களையாவது !
காய்க்கவும் பழுக்கவும் !
செய்கிறது அதுவே! !
- ப்ரியன்

இலக்கியவாதி அருள் மா.இராஜேந்திரன்

மன்னார் அமுதன்
பெற்றது கோடி பேசுதல் சிறிதே!
மற்றது எல்லாம் மனதின் பதிவே!
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்!
அருள்மா சிறப்புகள் எல்லாம் மெய்யே!
ஆண்டுகள் நாற்பதாய் அருள்மா புரிந்த!
அரும்பணி உரைப்பது மன்றக் கடமை!
ஆற்றிய பணியில் குறைநிறை அளந்து!
குற்றம் பரப்புதல் சிலரது மடமை!
அருள்மா அவர்கள் அணிந்தது வெண்மை!
ஆடைகள் போலவே உள்ளமும் தும்பை!
அடியவன் தோளிலும் அருள்மா கைகள்!
ஆதரவாகத் தொட்டது உண்மை!
வருவார் அமர்வார் வார்த்தைகள் மொழியார்!
வாசலில் காண்கையில் புன்னகை மொழிவார்!
இலக்கிய உரைகளை இயம்பி அமர்கையில்!
இனிதிலு மினிது இயம்பிய தென்பார்!
அருளின் கதைகள் எல்லாம் விதைகள்!
கருப்பொருள் செறிவைக் கதைத்தனர் பலபேர்!
கதைகளின் மாந்தர் கண்ணில் படுகையில்!
விதைகளில் பலது விருட்சமாய் வளரும்!
வற்றிய கிணற்றில் தவளைகள் போலே!
வாடயிலே நீர் ஊற்றினீர் எம்மில்!
பற்றிய பிடியைத் தளர விடாதே!
வருவாய் விரைவாய், உயர்வாய் என்றீர்!
தூற்றிப் பழகா போற்றும் குணத்தார்!
ஆற்றிய பணிகள் அத்தனை அருமை!
கற்றதை எல்லாம் கைமண் அளவாய்க்!
கருதியே அருள்மா கதைத்தது அருமை!
பெற்றது கோடி பேசுதல் சிறிதே!
மற்றது எல்லாம் மனதின் பதிவே!
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்!
அருள்மா சிறப்புகள் எல்லாம் மெய்யே!
-----------------------------------------------------------------------------------------------------------------------!
இலக்கியவாதி அருள் மா.இராஜேந்திரனின் மறைவையொட்டிய கவிதை

குட்டிதேவதை…

பாண்டித்துரை
புன்னகையை சுமந்து வருகிறாள்!
அறிமுகம் இல்லாமலே – என்!
அகம் தொட எத்தனிக்கிறாள்.!
எப்படியும் முடிகிறது – அவளின்!
உலகத்தினுள் எனை கடத்த!
ஜன்னல் வெளி பேசுகிறாள்!
பறந்து சென்ற பறவைக்காக!
அவள் சொன்ன கதைகளையெல்லாம்!
டெடிபீர் பொம்மைகள்!
எனக்கு தெரிந்திடாத வண்ணம்!
எங்கே ஒளித்து வைத்துள்ளதோ!!
முகத்தை சுழித்து நாக்கை துருத்தி!
அவளுக்கான சில்மிசங்கள்!
வெறுமையை ஆக்ரமிக்கிறது.!
பொம்மையை தட்டிக்கொடுத்து!
கண்ணயரசெய்த பின்னே!
பெரியமனுசி கொட்டாவி விடுகிறாள்!
அவளுக்கான உலகில்!
என்னற்ற ரகசியங்கள்!
புதைந்து கிடக்கின்றன!
ஏப்போதாவது ஒன்றுதான்!
என்னால் தோண்டியெடுக்கப்படுகிறது.!
-பாண்டித்துரை

நீசத்தன நாட்டியம்

வேதா. இலங்காதிலகம்
ஓகோவெனும் பொய்களின் முன்னர்!
ஓலமிடும் உண்மை வாயடைக்கிறது.!
மாலை பொன்னாடைப் போர்வையில்!
கூடும் வாசனையுலகை மயக்குகிறது.!
சிரிக்கும் உதடுகளால் சிந்தி!
சிமிட்டும் கண்களால் விரிந்த!
சுற்றறிக்கைப் பொய் வார்த்தைகளில்!
சிதறியொழிகிறது பெரும் உண்மைகள்.!
வாய்பந்தலோடு வாலாட்டும் பல !
பொய்ப் புகழ்ச்சிகள் உண்மையை!
நிர்வாணமாக்கிக் கண் மூடி!
நீசத்தனமாய் நாட்டியமாடுகிறது.!
அரிச்சந்திரப் பாதை மாறி!
அடியெடுக்கும் ஆலவர்ணப் பொய்!
விசிறிகளுக்குத் தானே உலகில்!
ஆரத்தியும் ஆரவார வரவேற்பும்!!
ஈழவரை நம்ப வைத்து!
ஈவிரக்கமற்று அவர் வாழ்விடத்தை!
ஈனத்தனமாய் அபகரிக்கும் நன்மையற்ற !
ஈழவரையழிக்கும் பொய் அழியாதோ!!
இது எத்தனை நீள நாடகம்!!
பொது உண்மையெதுவெனத் தெரிந்தும்!
மெதுவாக அங்கீகாரத்துடன் அரியணைக்காய்!
ஒதுங்கி நகருகிறது அநியாயம்!!
7-6-2009

நெகிழிக் கோப்பைகள்

அவனி அரவிந்தன்
குளிர்காலத்தில் இது!
உடம்புக்கு நல்லதுப்பா !!
எப்பவாச்சும் எடுத்துக்கிட்டா தப்பில்லையே!!
அப்பப்போ சேர்த்துக்கிட்டா!
இதயத்துக்கு நல்லாதாம்ல !!
போன்ற சப்பைக்கட்டுகளுடனே!
பெரும்பாலான நேரங்களில் நாம் அதை!
விலை கொடுத்து வாங்குகிறோம்!
கூடவே ஓரிரு நெகிழிக் கோப்பைகளையும்...!
ஆரம்பத்தில் அளவு சரி பார்த்தே!
கோப்பைகளில் பரிமாறுகிறோம்!
சந்தோச துக்க தருணங்களை...!
புலனறியாத பொழுதுகளில்!
மயக்கும் மன்மத நீர்மம்!
குருதியுடன் புணர்ந்த பின்னர்!
அளவுகளைத் தொலைத்து!
எக்குத் தப்பாய் நிறைத்து!
வழியவிடுகிறோம் கோப்பைகளை...!
நிலவை நாலாய் மடித்து!
அதனோரத்தில் நட்சத்திரங்கள் தெளித்த!
சிவப்புப் பூ ஒன்றை ஒட்டிப் பரிசளிக்கிறோம்!
அவர்களின் கூந்தல்முடி கலைந்ததற்கு!
காற்றுடன் கத்திச் சண்டை போடுகிறோம்!
நாய்களின் பூனைகளின்!
பெயர் வைத்தழைத்து சிரித்துக் கொள்கிறோம்!
ஒரு நொடி பிரிந்தாலும் உயிர்விடுவேனென்று!
பரஸ்பரம் பிதற்றிக் கொண்டு அலைகிறோம்...!
சலித்துத் தீர்ந்த நொடியில்!
மறுப்பேதுமின்றி அமைதியாக எழுந்து!
தெளிந்த சிந்தையுடன் கைகுலுக்கி!
ஒருவரையொருவர் திரும்பிப் பாராமல்!
வேறு வேறு திசையில் நடக்கிறோம்...!
போகிற வழியில் இருவரும்!
சர்வ சாதாரணமாக!
கசக்கி எறிகிறோம்!
அந்த நெகிழிக் கோப்பைகளை,!
நட்பென்ற பெயரில்!
நாம் பழகித் திரியும்!
சில காதல்களைப் போல

குதிரை ஓட்டி.. உயிர்.. நிரந்தர வலி

ரசிகவ் ஞானியார்
குதிரை ஓட்டி.. உயிர் !
1.குதிரை ஓட்டி!
என் முதல் குதிரை!
பாதைகளிலிருந்து தாவி..!
பயணிகள் மீது மோதியது!!
என் இரண்டாம் குதிரையின்!
நேரான பாதை ..!
வளைவுகளாகிறது!!
என்று தணியுமோ!
பின் இருக்கை முத்தங்கள்?!
2.உயிர் !
வலியில் துடிக்கும்!
உயிரின் மதிப்பு!
பொருள் தேடலில்�!
பொசுங்கிப் போனது!!
எல்லாருமே ...!
கசாப்பு கடைக்காரர்கள்தான்!!
3.நிரந்தர வலி!
காதலிக்கு கல்யாணம்!
இவன்!
காதல் விதவையானது!
!
-ரசிகவ் ஞானியார் !
------------------------------------------------------!
முத்தமிழ் குழுமம்!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. -- பாவேந்தர்