மனச்சாட்சி மரணித்ததா?.. ஆதியும்
த.சு.மணியம்
மனச்சாட்சி மரணித்ததா?..ஆதியும் அகதியாய்!
!
01.!
மனச்சாட்சி மரணித்ததா?!
------------------------------------------!
தேடுகுது இரத்தமொன்று தெருவில் நின்று!
தெரிந்தபடி போதையினில் மகனும் இங்கே!
பாடுகுது தன்மகனின் நாமம் சொல்லி!
பாவியுமோ நினைப்பதில்லை பாவம் எண்ணி!
கூடுகுது வீட்டினிலே தினமும் கூட்டம்!
குடித்தபடி பேசுவதோ சுடலை ஞானம்!
வாடுகுது தண்ணியில்லாப் பயிரும் அங்கே!
வாந்தி வந்து கொட்டுகிறான் மதுவாய் இங்கே.!
நேற்றுவரை பேசிநின்றான் தெரிந்தே ஞானம்!
நேசமுள்ள நாடெனவே குடித்தான் மோசம்!
காற்றுவந்து சலசலத்துப் போகும் நாளும்!
காணவில்லை பகலினினை இவனின் வாழ்வும்!
ஊற்றுகின்ற தண்ணீரில் உரிமை காணும்!
உன்னதமாம்,சொல்லுவதோ அவனின் வாயும்!
நேற்றிருந்த அவன் வீட்டுக் கொட்டில் பேசும்!
நேசமுள்ள தாய்மனத்தின் அவல வாழ்வும்.!
நல்லமகன் காத்திடுவான் நினைவில் நாளும்!
நம்பியவள் பார்த்திருந்தாள் தினமும் சோகம்!
வல்லவனாய் வாழவைக்க உழைத்த ஊனும்!
வலிமையற்றுப் போனதுதான் காணும் மீதம்!
சொல்லுதற்கோ எண்ணுகிறாள் போகப் பாரம்!
சொந்தமகன் என்பதனால் நாடும் மௌனம்!
கொல்லுமவன் மனச்சாட்சி ஓர்நாள் என்றும்!
கொள்கையுடன் காத்திருக்காள் தெருவில்!
இன்றும்.!
!
02.!
ஆதியும் அகதியாய்...!!
-------------------------------!
பனி படர்ந்த பாறையுடன் காடும் மேடும்!
பாதியது உயிர் துறக்க அவற்றைத் தாண்டி!
தனித்தனியே இரவு பகல் முள்ளில் தூங்கி!
தஞ்சமென பொருள் காவும் பெட்டியேறி!
இனி வாழ்வும் இதற்குள்ளா முடியும் ஏங்கி!
இறைவனது நல்லருளால் நாடும் கண்டு!
குனியாத தலையுமது குனிந்து கூனி!
குடிவரவும் கிடைக்கவென எதுதான் கோலம்.!
பூசுகின்ற திருநீறால் புனிதர் காட்டி!
புதியதொரு பெயர் தேட கோயில் கட்டி!
வீசுகின்ற பக்தரவர் பணத்தையெல்லாம்!
வித்தகங்கள் காட்டும் பல தர்மகர்த்தா!
மாசுடைய செயல் தெரிந்தும் மடியில் போட!
மாற்றுவழி ஏதறியா பக்தர் ஏங்க!
தேசுடைய கடவுளுமோ நீதி மன்றில்!
தேங்கியவர் அழுதபடி நிற்கும் கோலம்.!
சாமியுமோ அகதியென மனுக்கொடுத்து!
சங்கதிகள் ஏதறியா மன்றில் நிற்க!
பூமியிலே தாம் புனிதர் எனவும் சொல்லி!
புதுப்புதிதாய் அறிக்கைகளும் இதழ்கள் காவ!
பினாமிகளும் வகை தொகையாய் நாளும் கூட!
பிறந்துவிடும் கோயில் பல வீதிதோறும்!
சுனாமியது உங்களையேன் தேடவில்லை!
சுற்றியது அழித்திருப்பின் இதுவேன் கோலம்.!
-த.சு.மணியம்