கனவுகள் நிரம்பி வழிய!
ஒளி வழியே!
நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கிறது!
பௌர்ணமி வானம்…….!
சலனம் மறந்து போன!
புற்தரைகளோடும்...!
கடல் அலைகளோடும்..!
துகள் சுமக்கும் மண்ணோடும்..!
இன்னும்!
பூமியில் வயிற்றில்!
ஒட்டிக்கொண்டிருக்கும் எல்லாவற்றோடும்...!
தூக்கம் மறந்து போன!
எனது கண்கள் பற்றி!
சப்தம் நிர்மூலமான இந்தக்கணம்!
என்னதான் சிந்தித்திருக்கும்...????!
மிதமான தென்றலோடு!
எங்கிருந்தோ வரும் நாயின் ஊளை கூட!
இந்த அர்த்த ராத்திரியை என் முன்னே அர்த்தமாக்கிக்கொள்கிறது...!
எத்தனை பேரின் நிர்வாணத்தை!
இந்தக்காரிருள்!
தன் பார்வைச்சிறகில்!
சுமந்திருக்கும்...?!
திறந்தே கிடக்கின்றன!
இரவின் கண்கள்......!
பின்னிரவின் மெல்லிழை வாயிலில்!
தூங்கிப்போனேன் நான்...!
அதன்பின்னும் பௌர்ணமி வானம்!
பேசிக்கொண்டேயிருந்திருக்கும்!
கதிரொளியொன்று!
ஏதோ ஒரு மண்ணின் முனைப்பரப்பை தீண்டியிருக்குமே...!
அதுவரை
நிந்தவூர் ஷிப்லி