பாடும் புல்லாங்குழல் ஒன்று!
ஊமை யாவதேன்!
இந்தக் குழலுக்குள்!
இன்னும்!
பூபாளம் இருக்கிறது!
மரணித்த மணவாளனும்!
அதை எடுத்துச் செல்வதில்லை!
வசை பாடும் வலியோரே!
தேய்ந்த குழல் அல்லவே இவள்!
தென்றல் தொட்டாடுகின்ற!
அந்த கீற்றுனை கேளுங்கள்!
இவள் பாடும் ராகங்களை!
அது அறியும்!
அழியாத ராகங்கள் எத்தனையோ!
இந்தக் குழலுக்குள்ளே!
தாள நயங்களோடு!
நூல் வேலிக்குள் நின்று!
மெளன ராகம்!
இசைத்துக்கொண்டே இருக்கிறது!
மனசுக்குள் ஏன் இன்னும் மத்தாப்பு!
புதுமை படைத்திட!
எத்தனை நாள் காத்திருப்பீர்.!
வல்வை சுஜேன்