புனிதன் எவன் - வல்வை சுஜேன்

Photo by engin akyurt on Unsplash

மனிதனை மனிதன் தின்கிறான்!
புன்னகை ஒன்றுக்குள்!
பூகம்பம் வளர்த்து !
சுவாசம் கொள்கிறான்!
யாரடா மனிதன் இங்கே !
எனக் கேட்டால்!
அவன் தான்தான் என்கிறான்!
புனிதன் எவன் என்று!
எப்படி காண்பேன் இறைவா !
படைத்திட ஒருவன்!
காத்திட ஒருவன்!
அழித்திட ஒருவன்!
மூன்று தெய்வங்களே !
உங்களின் தொழிலை!
புணர்ச்சியில் படைப்பும்!
உளைப்பில் காத்தலும்!
அகம்பாவத்தில் அழித்தலும்!
இவனே செய்கிறான் !
இறைவா உன்னிடத்தில் இவன்!
எப்போது கூலிக்கு சேர்ந்தான்!
உளைப்புக்கு கூலி யார் கொடுப்பது!
கொடியவன் இறைவனா மனிதனா!
புனிதன் எவன் என்று!
எங்கே தேடுவேன்
வல்வை சுஜேன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.