உடையாத கண்ணாடியில் உலகிற்கு - வித்யாசாகர்

Photo by Paweł Czerwiński on Unsplash

உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !!!
-----------------------------------------------------------!
நாட்கள் தொலைத்திடாத!
அந்த நினைவுகளில்!
சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ;!
உனை பார்த்த பழகிய உன்னோடு பேசிய!
முதல் பொழுது முதல் தருணம் -!
உடையாத கண்ணாடியின் முகம் போல!
பளிச்சென இருக்கிறது உள்ளே;!
ஓடிவந்து நீ!
சட்டென மடியில் அமர்ந்த கணம்!
என்னை துளைத்து துளைத்து பார்த்த!
இருவிழிகள்,!
எனக்காக காத்திருக்கும் உனது தவிப்புகள் என!
எல்லாமே உன்னை எனக்குள் -!
மறவாமல் வைத்திருக்கிறது இன்னும்;!
எனக்காக இல்லையென்றாலும்!
உனக்காகவேனும் வந்து -!
உன் வாசலில் நின்று நீ ஓடிவந்து கட்டிக் கொள்ளுமுன்!
ஸ்பரிசத்தை எல்லாம் சேகரித்து -!
இன்றுவரை பத்திரமாக உணர்வுகளில்!
வைத்திருக்கிறேன்;!
பெரிதாக அதையெல்லாம் எண்ணி!
கதையெழுதும் காதலெல்லாம்!
அல்ல; நம் காதல்;!
காதலென்ற வார்த்தை கூட நம்!
உதடுகளை ஒருவேளை சுடச்செய்யலாம்,!
அதையெல்லாம் கடந்து!
நமக்கிடையான ஒரு புரிதல்; ஒரு ஆழமான அன்பு அது.!
திரும்ப எடுக்க இயலா நீளக் கிணற்றுக்குள்!
தவறிப் போட்டுவிட்ட - கல் போல!
மனதிற்குள் மனதை போட்டுவிட்டு!
யாரிடமே சொல்லிக் கொள்ளாத தவிப்பு அது.!
சொல்லியிருந்தால் மட்டும் உலகம்!
அதற்கு என்ன பெயர் வைத்திருக்குமோ!
தெரியாது - ஆனால் -!
காதலென்னும் அவசியமோ!
நட்பென்று சொல்லும் பெரிய வார்த்தைகளோ!
அல்லது 'அத்தனை' இடைவெளியோ கூட!
அவசியப்பட்டிருக்க வில்லை நமக்கிடையே;!
அப்படி -!
சேருமிடமே தெரியாத!
வானமும் பூமியும் போல்!
எங்கோ ஒரு தூரத்தில்!
ஒட்டிக் கொண்டு கிடந்தது நம் மனசு;!
நானென்றால் நீ ஓடிவருவதும்!
நீயென்றால் நான் காத்திருப்பதும்!
எச்சில் பாராமல் -!
தொடுதலுக்கு கூசாமல் -!
ஆண் பெண் பிரிக்காமல் -!
எந்த வரையறையுமின்றி -!
உரிமையே எதிர்பாராது - மனதால் மட்டும்!
நெருங்கியிருந்த உணர்வு!
சொன்னால் மட்டுமிப்போ யாருக்குப் புரிந்துவிடும்???!
தெரிந்தால் புரிந்துக் கொள்ளக் கூட!
திராணியின்றி நகைக்கும்!
உலகம் தானே இது;!
அட, உலகமென்ன உலகம்;!
உலகத்தை தூக்கி வீசிவிட்டு!
நாம் கூட நம்மை வெளிப் படுத்திக் கொள்ள!
தயாரில்லை என்பதற்கான காரணத்தை!
காலம் மட்டுமே ஒருவேளை!
அறிந்திருக்கக்கூடும்;!
எப்படியோ; யார்மீதும்!
குற்றம் சொல்வதற்கின்றி பிரிந்தபின்!
இன்று - அறுத்துப்போட்ட உயிர்போல வலிக்கிறதே!
உனக்கும் எனக்கும் மட்டும்;!
தூரநின்று கண்சிமிட்டும்!
அந்த குழந்தையின் சிரிப்புப்போல!
நீ சிரிக்கும் அந்த சிரிப்பின்!
நினைவுகளில் தான்!
கட்டிவைத்திருக்கிறேன் என்னை -!
வாழ்விற்குமாய்; இப்போதும்!!!
இப்படியே கடந்து கடந்து!
ஓர்நாளில் -!
என் உயிர்முடுச்சு அவிழ்ந்து!
நான் கீழே விழுகையில் -!
ஒரு சொட்டுக் கண்ணீராகவாவது!
நீ வந்து நிற்கையில் -!
என் உடம்பு சாம்பலாய் பூத்திருக்கும்!
நீ விழுந்து அழுது புரண்டால் - உனக்கு!
வலிக்காமல் தாங்கிக்கொள்ளும்
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.