எங்கள் தேசம் இந்திய தேசம் - நா.முத்து நிலவன்

Photo by FLY:D on Unsplash

நா.முத்து நிலவன் -- !
(NCERTவெளியிட்டுள்ள 'ஹிந்த் தேஷ்கீ நிவாஷி' எனும் இந்திப் பாடலின் 'இசைபெயர்ப்பு' ) !
--பல்லவி-- !
எங்கள் தேசம் இந்திய தேசம் !
வாழ்க வாழ்க வாழ்கவே! !
இந்து முஸ்லீம் கிறிஸ்துவர்கள் !
எல்லாரும் சகோதரர்கள்! !
--சரணங்கள்-- !
வேறு வேறு வண்ணப் பூக்கள் !
சேர்ந்த வாச மாலை நாங்கள்! !
வண்ணம் வேறு வேறென் றாலும் !
வாசம் நெஞ்சில் ஒன்றுதான்! !
--1(எங்கள் தேசம்... !
சிந்து கங்கை பிரம்ம புத்ரா !
கிருஷ்ணா காவேரி !
சென்று சேரும் கடலில் என்றும் !
நீரின் தன்மை ஒன்றுதான்! !
--2(எங்கள் தேசம்... !
பேசும் மொழியும் வாழும் இடமும் !
வேறு வேறு ஆனால் என்ன? !
பாச உணர்வும் பண்பும் அன்பும் !
தேசம் முழுதும் ஒன்றுதான்! !
--3(எங்கள் தேசம்... !
இமயத் தலையில் பனிப்பூ மேகம் !
குமரி அலையில் கொலுசுகள் நாதம் !
குஜரத் வங்கத் தோளில் மோதும் !
கொஞ்சும் தாயின் ஒற்றுமை கீதம்! !
--4(எங்கள் தேசம்... !
(இந்தப் பாடல், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., தமிழ் இலக்கிய வகுப்பிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டுள்ள கவிஞரின் புதிய மரபுகள் எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அருப்புக்கோட்டை ம.தி.தா. தேவாங்கா அரசுக் கலைக்கல்லூரி மாணவர்களால் பாடப்பட்டு, அனைத்துக்கல்லூரிப் பாடல் !
போட்டியில் முதல் பரிசு பெற்று, மதுரை வானொலியின் தேசபக்திப் பாடல் வரிசையில் அடிக்கடி இசைக்கப்பட்டு வருகிறது) !
------------------------------------- !
!
வறண்டது காவிரி மட்டுமா? !
- நா.முத்து நிலவன். !
வறண்டது காவிரி மட்டுமா? - மக்கள் !
வாழ்க்கை நெறியும்,பண் பாடும்கிழிந்ததே ஒட்டுமா? !
இருண்டது போலவும் தோணுதே! -அட !
ஈராயிரத் தாண்டு, பாரம்பரியமும் நாணுதே! -1 !
எங்கெங்கு காணினும் வழ்ச்சியா! - அதில் !
ஏழை நிலைமையை மூடி மறைத்திடும் வீழ்ச்சியா! !
அங்கங்கும் 'ஒளிர்கிற' காட்சியா! -அவை !
அப்பாவி மக்களின் அம்மணத்தை விற்ற சாட்சியா! -2 !
அறிவியல் வளர்ந்ததே போதுமா? - அவை !
அடிமட்ட ஏழையை அப்படியே விடல் நீதமா? !
பொறியியல் வளர்ந்தென்ன லாபம்? - ஒரு !
போக்கிலா மாந்தர்க்குப் புகலிடமில்லையே பாவம்! -3 !
‘பாவேந்தன் பாரதி தாச! - உன் !
பாட்டு வழிஎங்கள் நாட்டுவழி’ எனப் பேச -பல !
நாவேந்தர் எம்மிடம் உண்டு!- எனில் !
நாவேறு! செயல்வேறு என்பதே எம்மனோர் தொண்டு! -4 !
‘மலைவாழைக் கல்வி’யை உண்டோம்! - அறிவு !
மட்டும் வளர்ந்தது, நாட்டையே காடாகக் கொண்டோம்! !
விலைபேசி வாங்கினோம் வம்பை - உள்ள !
வேற்றுமை யைஊதிப் பெரிதாக்கி விடுகிறோம் அம்பை! -5 !
கல்வியில் லாததோர் பெண்ணை - நீ !
களர்நில மேயெனக் கவிபுனைந் தாய்,தஞ்சை மண்ணை !
புல்விளை யாததோர் புதராய் - நாங்கள் !
போட்டுவைத் தோம்,பெண்ணைப் போற்றிவைத் தோம்ஒருபுதிராய்! -6 !
‘உலகமே உண்ண உண்’ என்றாய்! - 'இந்த !
உலகையே நானெடுத்(து) உண்பேன் தனியாக' என்றார், !
கலகமே நடத்திய போதும் -அதைக் !
'காவல் பணி'யெனக் காட்டுவதே எங்கள் வேதம்! -7 !
வறண்டது காவிரி மட்டுமா? - இல்லை !
வளத்தமிழ் நாட்டினில் பண்பாடும் கிட்டுமா? !
இருண்டது போலவும் தோணுதே! - இதை !
எப்படியும்,இனி மாற்றிடவே வழிகாணுவோம்
நா.முத்து நிலவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.