சுட்டு எரிந்ததொரு காடு.. முள்ளிவாய்க்காலிலிருந்து...!
01.!
சுட்டு எரிந்ததொரு காடு!
---------------------------!
யார் மரணமும்!
யாரையுமே நோகவில்லை !
முடிவில் -!
முள்ளிவாய்க்காலை விழுங்கி !
சுடுகாடாய் கனத்தது !
உலக தமிழரின்; கல்மனசு!!
போர் போரென!
கதறிய கத்திய!
அவலகுரலில்;!
செவிடாகிப் போயினர்!
உலகத்தினர்,!
ஊமையாகிப் போயினர்!
தமிழர்கள்!!
ஆணும் பெண்ணும்!
குழந்தையுமென -!
கொன்று குவித்தவனுக்கு !
பெயர் போர்வீரனும்,!
கொள்ளப் பட்டவனுக்குப் பெயர்!
தீவிரவாதியுமெனில்,!
சொன்னவனை இனி!
சிங்களனென உரைப்போம்!!
தாய்மை பூண்ட!
பெண்களின் அடி வயிற்றில்!
பற்றி எரியட்டும்;!
முள்ளிவாய்க்காலின் இழப்பும்!
ஈழக் கனவும் -!
காரணம், ஆண்கள் விட்டதை!
பெண்களாவது பிடிக்கட்டும்!!
காசு காசென்று!
அயல் தேசங்களில் அலைந்ததில்!
வாழ்க்கையை!
வாழாவிட்டாலும்!
இன பற்றும்!
தேசப் பற்றினையும் கொண்டோம்;!
ஈழத்தை மட்டுமே!
கைவிட்டோம்!!
சுட்டு எரிந்ததொரு!
காடு;!
யாரும் -!
ஈழமென எண்ணி!
விடாதீர்கள்;!
தமிழன் இனியும் !
தலைகுனிவதாய் இல்லை!!
02.!
முள்ளிவாய்க்காலிலிருந்து...!
---------------------------------!
ஒரு நூறு தெரு !
தள்ளி தான் !
கேட்கிறதந்த சப்தம்;!
கண்ணீரால் யாரையோ!
கூப்பாடு போட்டழைக்கும்!
ஒரு ஓலம் அது;!
சுலபமாய் சொன்னால்!
மரணம் எனலாம்,!
வாழ்பவன்!
கற்றும் தெளியாத!
அல்லது -!
கற்காத பாடம்.!
மரணம் என்றாலே!
நெஞ்சை உலுக்கும் பயத்திற்கு!
மரணமின்றியே இயங்குகிறது!
நிறைய சதைகள்;!
ஆம், ஜாதி பேசி!
மதம் பேசி!
இனம் பேசி !
ஏற்றத் தாழ்வு பேசி!
யாரை கொன்றேனும்!
சுயநலம் காக்கும் சதைகளாக தானே!
வாழ்கிறோமென சொன்னால்!
எத்தனை பேர் ஏற்பீர்களோ!
எத்தனை பேர் மறுப்பீர்களோ;!
மறுக்க உங்களுக்கு!
சுதந்திரமுண்டு -!
ஏற்க எனக்கு மனமில்லை - நீங்கள்!
சதைகளே;!
சதை குவிந்த ஒரு பிண்டமே;!
வேண்டுமெனில்!
பிணமென்றும் வைத்துக் கொள்ளுங்கள்.!
டேய்........, யாரையடா !
பிணமென்றாய்' என !
விரட்டி பின்னால் ஓடுகிறேன்..!
என்னை விட வேகமாக ஓடி!
முட்கம்பிகளை தாண்டி!
முள்ளிவாய்க்காளின் ஒரு!
ரத்தக் கரை படிந்த பாறைக்குள் சென்று!
மறைகிறதந்த உருவம்
வித்யாசாகர்