மனிதக்.. தொட்டால்.. அந்த சாதிக்குருவியும் - வித்யாசாகர்

Photo by Jan Huber on Unsplash

மனிதக் கண்களில் வடிகிறது சாமியின் ரத்தம்.. தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை..அந்த சாதிக் குருவியும் தெருவில் நிறைய பிணங்களும்..!
01.!
மனிதக் கண்களில் வடிகிறது சாமியின் ரத்தம்!
------------------------------------------------------------------------!
கோவில் உடைப்பு!
மசூதி எரிப்பு!
பாதிரியார் மரணம்!
புத்தப் பிச்சுகள் போராட்டம்!
சாமி சிலை திருட்டு!
அட்சைய திருதியை, ஆடிவெள்ளி அதிசய சலுகை!
சாமி ஊர்வலம் நெருக்கத்தில் பலர் மரணம்!
சிலுவைக்குப் பின்னே சிலுமிசம்!
கோவிலில் கற்பழிப்பு !
என நீளும் செய்திகள்; நாளும் கண்ணீர்..!
எதற்கு இதலாம்..?!
மனிதரைக் கொன்று!
மனிதத்தை அழித்து!
பிறகங்கே!
மார்தட்ட மதமெதற்கு?!
சற்று திரும்பிப் பாருங்கள்!
இதலாம்!
கடந்து கல்லிற்கு முன் ஏற்றிய!
கற்பூரத்தையும்!
குற்றத்தின் கணக்கில்!
எழுதிக் கொண்டிருப்பார் - அங்கே!
கடவுள் இருந்திருந்தால்..!
உண்மையில்!
கடவுள்.. பேய்..!
இரண்டையுமே இல்லையென்று!
அறியுங்கள்;!
இல்லையென்று அறிவதற்கே!
இருக்கென்று நம்புகிறோம்..!
இருக்கென்று முடுக்கிய வேதம்!
இறுதியில் சொல்வதும் அதைத்தான்!
இதுமட்டுமில்லை என்பதை!
எல்லாம் ஒன்றென்பதை!
நீயும் நானும் ஒன்றென்பதை!
வேறில்லை வாழ்க்கை என்பதை!
வேறில்லாததை அறிகையில் அறியும்!
எல்லாம் ஒன்றாகயிருப்பதை..!
அந்த ஒன்றாக இருப்பதை அறியவே!
ஒன்றியிருக்கும் மனசு வேண்டும்!
ஒன்றும் மனது ஓடாதிருக்கவே!
பயமறுந்த தெளிவு வேண்டும்!
வேண்டுவதை வேண்டிப் பெறுவதையே!
மதங்கள் கற்றுத்தர முன்வந்தன!
முன்வந்ததன் பின்சென்றவரில் சிலர்தான்!
முற்றிலும் பிசகானார்!
முதலுக்குக் காரணம் முதலை அறிவதாகவே!
இருந்தது!
கடைசியில் -!
எல்லாம் கடந்து நிற்கிறோம்!
இன்னும் பயந்து நிற்கிறோம்!
கொடுமை; பேயிக்கு மட்டுமல்ல!
சாமிக்கும் பயம்!
சாமிக்கு முன் பேசும்!
ஆசாமிக்கும் பயம்,!
அவன் சொல்வதைக் கேட்டு!
கேட்டவருக்கெல்லாம்!
பயம்..!
இருட்டை!
உருவகப் படுதிக்கொண்டவன்!
பேயென்று பயந்தான்,!
வெளிச்சத்தை அறிவோடு காணாதவன்!
சாமிக்கு பயந்தான்,!
பயம் தான்!
மூடதனத்தின் மூலதனம்!
பயம் தான்!
அறிவை முடக்கும்உணர்ச்சி!
பேய் படம்!
எடுத்தவர்களையும்!
சாமி படம் எடுத்தவர்களையும்!
ஆராய்ந்துப்பார்த்தால்!
அந்தச் சாமிக்குமுன்!
பாதிக்கும்மேல்!
பலர் தண்டனைக்குரியவர்களே..!
சாமி என்பது!
நமது!
வணங்களில் இருக்கும் நம்பிக்கை!
நம்பிக்கை மட்டுமே..!
நம்பி நம்பி நாம்!
வெளிக்கொண்டுவரும்!
நமக்குள்ளிருக்கும் சக்தியது சாமி..!
நம்புவதற்கு நல்லதைத் தேடி!
நல்லதென நம்பி!
நன்மைக்கென!
நாமேப் போட்டுக்கொண்ட பாதைதான்!
ஆன்மிகம்,!
அளவோடு வகுத்துக்கொண்ட!
அறிவு அது,!
அது கடந்து!
அது கடந்து!
என நீளும் இயற்கையின்!
எல்லையில்லா ஆனந்தம்!
திறன்!
வெளி!
ஒரு சுகம்!
எனதில்லை!
நானில்லை என்று சரணடைவதில் ஒரு சுகம்,!
வெளியை!
உள்ளிருந்துக் கண்டு!
வெளியே இருக்கும் வெளியை!
உள்ளிருந்தே அசைக்கும் பயிற்சிக்கு!
துணையாக்கிக் கொண்ட பாடம்தான்!
ஆன்மிகம்!
கல்லை நம்பிக்!
கும்பிட்டாலும்!
கல் சாமியாகும்;!
சாமியாக இருக்கும் அனைத்தின்முன்னும்!
அது ஒரு!
சாட்சியாகும் படிப்பினை, அவ்வளவுதான் சாமி..!
அதற்கென!
அடித்துக் கொள்வதை விட்டுவிட்டு!
அனைத்தையும்!
படித்துக்கொண்டுப் போனால்!
அறிவு!
அது நாம் அனைத்துமாய் இருக்கும்!
ஒரே மூலத்தின் சாட்சி என்றுக்!
காட்டும்!
முடுச்சிகள் அவிழ்ந்து!
மனம் கூடி!
மேல் பரப்பப்பட்ட நம்பிக்கைகளை அகற்றிவிட்டு!
நிர்வாணம் பூண்ட எண்ணத்துள்!
நீயும் நானும் ஒன்றெனப் புரியும்..!
ஒன்றென!
எல்லாம் அறியவே!
எல்லாம் ஒன்றென்றுப் புரியவே!
எதன் மீதும் கோபமின்றி!
எதுவாகப் பிறந்தோமோ!
அதுவாகப் போனால் –!
அறம் தேடித் போனால்!
போகலாம்!
மாறிப்போகலாம்!
நமக்கான உலகமும் இனிவரும் செய்திகளும்..!
!
02.!
தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை..!
----------------------------------------------------------------------!
துருப்பிடித்த சாதி – அது!
திருத்திடாத நீதி,!
துண்டுத் துண்டாகி - இன்று!
உயிர்களை குடிக்கிறது சாதி..!
தலைமுறையில் பாதி – அது !
கொன்று கொன்று விழுவதேது நீதி ?!
காதல்சருகுகளை பிஞ்சுகளைக் கொன்று!
கடும் விசமாய் பரவுகிறது சாதி..!
கருப்பு வெள்ளையில்லா !
ஒரே சிவப்பு ரத்தம், அது சிந்திச் சிந்தி!
நனைகிறது பூமி, செத்துமடிபவர் கீழேனில்!
சாகடிப்பவரை மேலென்னுமா சாதி ?!
ச்சீ.. கேட்கவே வெட்கம்!
செங்கல் வேகலாம், சாதியில் மனிதர் வேகலாமா?!
செந்நீர் வகைக்குப் பிரியலாம் !
மனிதர் மேல் கீழாய் பிரியலாமா ?!
சுத்தும் பூமிக்கு; யார் மேல் ? யார் கீழ்? !
புயலோ பூகம்பமோ வந்தால்!
சாவதற்கு’ பெரியார் யார்? சிறியார் யார்?!
பிணம். அத்தனையும் ஒரே பிணம்.,!
சுடுகாட்டில் எரிப்பதற்கும் நடுக்காட்டில் புதைப்பதற்கும்!
பழக்கங்கள் வேறாகலாம், புதைக்கும் எரிக்கும்!
மனிதர்களுக்கு அதே இரண்டு கால்கள் கைகளெனில்!
வகைக்குப் பிரித்த சாதியெங்கே உயர்ந்தும் தாழ்ந்தும்போனது ?!
மனிதரை மிஞ்சிய தெய்வமில்லை !
எனும்போது' யாருக்கு உரிமையிங்கே !
சாதியினால் கொல்வதற்கும், சாதிப் பேர் சொல்லி !
வென்றதாய் எண்ணுவதற்கும் ?!
மலமள்ளியவன் படித்த மருத்துவத்தில் !
ஒரு உயிர் பிழைத்தால், மருத்துவன் சாமி;!
படித்தவன் புத்தி பரத்தையின்பின் போனால்!
அது அறிவிற்குக் கேடு; !
அடிப்பதும்' அணைப்பதும்' வெல்வதும்' தோற்பதும்' !
வாழ்வதும்' சாவதும்' மனிதர்களே மனதால் மனிதத்தால்!
திறமையால் தீர்மாணிக்கப்படட்டும்; !
பிறப்பால் எவரையும் இழுக்கென்று பழித்தல் தீது..,!
உருகும் மனசு' இளகும் நெஞ்சு'!
சாதிநெருப்பள்ளி வைக்கும் தலை – நாம்!
வயிறுதள்ளிப் பெற்றதும் வாயைக்கட்டி வளர்த்ததுமெனில்!
சாதிக்கினியிடும் நெருப்பெங்கே சடுதியிலிடுவீர்..!
!
03.!
அந்த சாதிக் குருவியும் தெருவில் நிறைய பிணங்களும்..!
------------------------------------------------------------------------------!
ஒரு ரோசாவும் இன்னொரு ரோசாவும்!
ஆடியாடி நெருங்கி ஒன்றோடொன்று தொட்டு!
விலகி மீண்டும் தொட்டுக்கொண்டது!
தொடுகையில் ஏதோ முனகிக்கொண்டது!
என்ன முனகலென்று –!
அதனருகில் சென்றுக் கேட்க காதை வைத்தேன்!
ஐயோ மனிதனென்று அலறி பயந்து!
இரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று விலகி!
இதழ்கள் சுருங்கி வாடி தலைகவிழ்ந்து!
பட்டென உதிர்ந்து தரையில் துண்டாக விழுந்தது..!
எனக்கு உயிர் அதிர்ந்ததொரு பயம்!
ஐயோ ரோசா உதிர்ந்தேப் போனதே!
செத்துமடிந்ததே ரோசாக்களிரண்டும்!
அத்தனைக் கொடியவனா நான் ?!
அவ்வளவு பயமா என்னிடம் ?!
என்னிடமா அல்லது எம்மிடமா ?!
ஆம் அந்த ரோசா இந்த மொத்த மனிதர்களைக்!
கண்டுதான் பயந்திருக்கும்,!
மொத்த மனிதர்களின் பிரதிநிதியாக என்னைக் கண்டிருக்குமோ (?)!
அப்போ இந்த மனிதர்களென்ன!
அத்தனைக் கொடியவர்களா ?!
ரோசா காம்பருந்துத் துண்டாக விழுந்ததே!
என்ன நினைத்து விழுந்திருக்கும்?!
அழுதிருக்குமோ ?!
துடித்திருக்குமோ ?!
ஐயோ திருடன் என்று அதிர்ந்திருக்குமோ ?!
பேராசைக் காரன் மனிதனென்று பயந்திருக்குமோ ?!
கொலைகாரன் என்று..?!
கற்பழிப்பேன் என்று அந்தக் காதலன் ரோசா!
காதலிக்குச் சொல்ல!
காதலி ரோசா பயத்தில் உதிர்ந்து!
அதைக்கண்ட காதலன் ரோசாவும்!
உதிர்ந்துப் போயிருக்குமோ ?!
அல்லது சாதி சொல்லி இருவரையும் பிரித்துவிடுவேனென்று!
அஞ்சிப் போயிருக்குமோ ?!
என்ன நினைத்து உதிர்ந்ததோ ரோசா, பாவம்!
உதிர்ந்தேப் போனதே இரண்டும்..!
இனி ரோசாவைப் பார்க்காது விட்டு விடுவோமா ?!
அல்லது மனிதர்களை விட்டு விலகியிருப்போமா ?!
யோசித்துக்கொண்டே இருந்தேன்!
இரண்டு சிட்டுக்குருவிகள் தூர நின்று!
என்னையும் தரையிலிருந்த ரோசாக்களையும் கண்டு!
கதறி கதறி அழுதது!
என்ன என்று சைகையில் கேட்டேன்!
அங்கே பார் மலருக்கடியில் இரு வண்டுகள்!
பாவம் இறந்துக் கிடக்கிறது என்றது..!
ஆமாம் வண்டைக் கொன்றது யாரென்றுப் பார்கிறேன்!
தூரத்திலிருந்து இரண்டுப் பிணங்களை!
ஒன்றன்பின் ஒன்றாகத் தூக்கி வருகிறார்கள்!
சாவுமேலச் சத்தம் காதைப் பிய்க்கிறது..!
விசில் பறக்கிறது..!
முன்னும் பின்னுமாய் நான்கைந்துப் பேர் குடித்துவிட்டு!
தன்னைமறந்து ஆடுகிறார்கள்..!
வானவேடிக்கை சொர்ர்ரென்று பறந்து விண்ணில்!
பாய்கிறது..!
மரணம் மரணமென்று ஒரே சப்தம்!
கொலை!
தற்கொலை!
இதுதான்!
இதுதான்!
இதுதான் கதி மனிதனுக்கு என்கிறது ஒரு குரல்!
நான் பதறி ஓடி என்னாச்சு!
என்னாச்சு!
யார் இவர்கள் என்றேன்!
அதோ அது ஒரு பெண், யாரோ!
பெரிய சாதி பையனைக் காதலித்ததாள்!
அதான் கொன்றுவிட்டார்கள் என்றார்’ கூட்டத்தில் ஒருவர்!
பின்னே வருவது யாரென்றேன்!
அதுவா., அது ஒரு ஆண்; அவனுடைய காதலியை!
யாரோ கொன்றுவிட்டார்களாம்!
அதான் விஷம் குடித்துவிட்டான் என்றார் இன்னொருவர்!
எட்டி நான் ரோசாவைப் பார்த்தேன்!
ரோசாக்கள் ரொம்ப வாடியிருந்தது!
சாவுமேள சத்தம் மிக சோராகக் கேட்டது!
விசில் அடித்து அடித்து எல்லோரும் ஆடினார்கள்!
மூலைக்கு மூலை டமால் டுமீல் என்று!
வெடிசப்தம்..!
முன்னேவும் பின்னேவும் அப்பாக்கள்!
அழுதார்கள்..!
அம்மாக்கள் மாறி மாறி!
மார்பிலடித்துக் கொண்டார்கள்!
சிட்டுக்குருவிகள் எம்பி வானத்தில் பறந்து!
எங்கோ கண்காணாத தூரத்துள் போய்!
மறைந்துபோனது,!
ரோசாக்கள் எதற்காக இறந்ததோ தெரியவில்லை!
கேள்விகள் எனக்குள்ளே!
பலவாக வெடிக்க..,!
பதில்களை விட்டு!
பல்லாண்டுகாலம் தூரத்தில் வந்துக்கொண்டிருந்தது!
அந்தப் பிணங்கள்!
பிணங்களுக்கு வழிவிட்டுவிட்டு!
நான் ரோசாக்களிடம் பேசச் சென்றுவிட்டேன்..!
ரோசாக்கள் இப்போதென்னை!
தெரிந்துக்கொண்டிருக்கும்
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.