இது என் முதல் கொலை.. சாதி மறு - வித்யாசாகர்

Photo by Tengyart on Unsplash

; சண்டையொழி..!
01.!
இது என் முதல் கொலை.. !
--------------------------------!
துரத்தி துரத்தி பெண்களை வெட்டுகிறாய்!
வெட்டு வெட்டு!
இரத்தத்தில் ஊறி சரியட்டும் உனது ஆண்மை..!
குத்தி குத்தி பிய்த்து சதையுண்ணும்!
மிருகத்தைவிட நீதான் பெரிய படைப்பில்லையா!
மனிதனாயிற்றே சும்மாவா; குத்திப் போடு..!
சாதியில் ஒரு குத்து!
மதத்தின் மீது ஒரு குத்து!
இந்த தேசத்தின் நெற்றியில் ஒரு குத்து குத்து..!
ஒரு உயிர் இந்த தேசத்து மக்கள்முன்!
பட்டப்பகலில் வெட்டவெளியில் கொன்று பறிக்கப்படுமெனில்!
மடிவது பெண்ணல்ல, எம் தேசத்தின் மாண்பு;!
அதனாலென்ன நீ குத்து !
அவள் இன்னொருவனின் தங்கை!
வேறொருவனின் மகள், எமது தாய்மையின் ஒரு பெருந்துளி!
அதனாலென்ன நீ குத்து!
நீ குடித்த பால்நாற்றம்!
அவள்மீது கூட அடித்துவிடலாம்,!
காலகன்று உனை ஈன்றப்!
பெண்மை வயிறுபிடித்துனக்கு!
சாபமிட்டிருக்கலாம்;!
அதனாலென்ன நீ குத்து!
ஒன்று இரண்டு மூன்று என இருபத்தைந்து முறை!
ஒரு பெண்ணைக் கத்தியால் குத்துகிறாய்,!
உன் பெருமை உன்மீதே யுனை காரி உமிழ்ந்திருக்கும்!
நீ கண்டிருக்கமாட்டாய், உனது கண்களின் வெறித்தீக்கு!
அதெல்லாம் இரையாகிப் போயிருக்கும்..!
எனக்குப் போகாது..!
அவள் கத்தியது எனது காதுகளை மௌனமாய்க்!
கொல்கிறது; கண்களுள் தீயாய் எரிகிறது..!
ஒவ்வொரு பெண் மடிகையிலும்!
எனது அறம் எனை அறுக்கிறது!
உயிருக்குள் அழுகிறேன் நான்; உனக்கெங்கே போனது உன் ஈரம்?!
உனக்கு ஈரம் இல்லை!
ஆண் எனில் தாயின் இன்னொரு பக்கம் என்பது!
உனக்கில்லை; நீ கொல்.. குத்து.. மனிதமரு.. மாய்ந்து போ..!
எங்கே போக.. உன்னை விடுவதாயில்லை!
எனது கைகளை இதோ உயர்த்திப் பிடித்திருக்கிறேன்!
எழுத்துக்களை எடுத்தெடுத்து அரிவாளாக வீசுகிறேன்!
வீசி வீசி உனை வெட்டுகிறேன்!
வெட்ட வெட்ட சரிவது – உனது உடலாகவோ!
உதிரமாகவோவெல்லாம் இருந்துவிடவேண்டாம்!
அந்த ஆண் திமிராக!
உன் அறியாமையாக இருந்துபோகட்டும் போ..!
போடா போ..!
!
02.!
சாதி மறு; சண்டையொழி..!
---------------------------------!
சதையறுக்கும் பச்சைவாசம்!
ஐயோ சாதிதோறும் வீசவீச,!
தெருவெல்லாம் சிவப்புநாற்றம்!
முட்டாள்கள் மேல்கீழாய் பேசப்பேச!!
மாக்க ளூடே சாதி வேறு!
மண்ணறுக்கும் சாதி வேறு!
மனிதங்கொல்லும் சாதியெனில் – அதைச்!
சாக்கடையில் விட்டெறிடா!!
பெற்றவயிற்றில் மூண்ட நெருப்பு!
வெற்று சாதிக்காய் மூண்டதுவே,!
பத்துமாதம் சுமந்த நெஞ்சில் – தீண்டாமை!
தகதிமிதோம் ஆடுதுவே;!
ஐயகோ பூமிப் பந்தை!
அற்பசாதி அறுத்திடுமோ!
ஓட்டைத்தட்டில் வறுமையென்றால்!
உயிர்க்கொண்டு அடைத்திடுமோ..?!
வீட்டுக்குவீடு சாதிப்பேச்சு!
ஊரெல்லாம் ரெண்டாப் போச்சே,!
அடேய்; மனிதத்தை விற்காதே, நில்!
இனி மிருகங்களே காரி உமிழும்!!
மிச்சத்தை மீட்கவேனும்!
மனிதர்களாய் ஒன்று கூடு,!
அங்கே ஆடையற்று கூட நில்!
சாதியோடு நின்று விடாதே;!
சாதியை விடு..!
சாதி போகட்டும் விடு..!
ஓ மனிதர்களே வா’!
என் மனிதர்களே வா “நான் சாதியற்றவன்”!
சொல் “நான் சாதியற்றவன்”!
சாதியற்ற இடத்தில்தான் நாளை!
மனிதர்கள் மனிதர்களாகப் பிறக்கக் கூடும்,!
மழை நிலா காற்று போல நாமும்!
மனிதர்களாக பிறப்போம்; மனிதர்களாக மட்டுமே மடிவோம்
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.