இதயவலி, இலவச இணைப்பு.. !
நோகாத கனவுகள்.. சில்லறை சப்தங்கள்..!
01.!
இதயவலி, இலவச இணைப்பு!
---------------------------------!
காதல் மறுக்கப் பட்ட காதலியின்!
கால்கொலுசு சப்தங்கள்;!
இதயம் மரணத்தினால் துடிக்கும்!
துடிப்பு;!
துரோகத்தால் புடைக்கும்!
நரம்பு;!
பிரிவின் வலியின்!
அழுத்தம்;!
திருட்டு கொல்லைகளால் எழும்!
பயம்;!
குழந்தை கதறும் அலறலின்!
கொடூரம்;!
பெண் கற்பழிக்கப் படும்!
காட்சிகள் மற்றும் கதைகள்;!
கொட்டிக் கொடுக்கப் படும்!
வட்டியின் வேதனை;!
உறவுகளின்!
சிரித்துக்கொண்டே நிகழ்த்தப் படும்!
குடும்ப அரசியல்;!
அலுவலக மேலதிகாரி!
அரசியல்வாதி!
காவல்துறை மற்றும் ரவுடிகளின் மிரட்டல்கள்;!
சமுகம் சுற்றிக் கிடக்கும்!
பொறுக்கமுடியா!
அநீதிக் குப்பைகளென -!
எல்லாமுமாய் சேர்ந்துக் கொடுத்தது!
முப்பத்தைந்து நாற்பது வயதில் - ஒரு!
பிரெசர் மாத்திரையும் -!
இரண்டு வேலை உப்பில்லா சோறும்;!
இதயவலி உடன் இலவச இணைப்பும்!!!
!
02.!
யாரையும் நோகாத கனவுகள்..!
---------------------------------------!
வலிக்காமல்!
சலிக்காமல்!
நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல்!
நிஜம் பூத்த மலர்களின் -!
வாசத்தொடும்,!
வரலாறாய் மட்டும் மிகாமலும்,!
முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த!
பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் -!
மல்லிகைப் பூக்க,!
ஒற்றை நிலாத் தெரிய,!
மரம் செடி கொடிகளின் அசைவில் -!
சுகந்தக் காற்று வீசும் -!
தென்றல் பொழுதுகளுக்கிடையே;!
வஞ்சனையின்றி -!
உயிர்கள் அனைத்தும் வாழ!
யாரையும் நோகாமல் ஒரு - கனவேனும் வேண்டும்!!!
!
03.!
சில்லறை சப்தங்கள்..!
-------------------------!
காலம் எட்டி உதைக்காத நாட்களில்லை!
விரலிடுக்கில் சொடுக்கினாற் போல் வருகிறது!
வலிகளும்.. துக்கங்களும்!!
சொல்லத் துணியா வார்த்தைகளுக்கிடையில்!
மறுக்கவும் மறக்கவும் முடிந்திடாத - ஏக்கங்களுக்கு நடுவே!
சிரிக்கத் துணிந்த வாழ்க்கையில் தான் -!
சொல்லி மீளாப் போராட்டாங்கள் எத்தனை...எத்தனை(?)!
நான் தான் மனிதனாயிற்றே என.... நெஞ்சு!
நிமிர்த்திய போதேல்லாம் - கர்வம் தலையில் தட்டி!
மார்பு உடைத்த நாட்கள் எண்ணிலடங்காதவை;!
விட்டுக் கொடுப்பது தானே - வாழ்க்கையென!
உணர்ந்து மன்னித்துவிடுகையில் 'கோழை, பயந்தாங்கொல்லியெனப்!
பெற்றப் பட்டங்களும் குறைவொன்ருமில்லை;!
இரண்டுக்கும் நடுவே - விட்டும் கொடுத்து!
கம்பீரமாய் எழுந்தும் நின்று வெற்றியென கர்ஜிக்கையில்!
எழும் போட்டிகளும் பொறாமைகளும் – காண்கையில்!
மிருங்கங்களுக்கு நடுவே வாழுதடா மனிதஜென்மமென!
பயின்ற - பாடங்கள் ஏராளம்;!
'போடா மனிதா' வென மனிதனை வெறுத்து!
'கடவுளே' என இறைவனை வேண்ட அமர்கையில்!
வேண்டுவதற்குக் கற்ற பாடங்களில் கூட -!
கண்ணில் பட்டும் படாமலுமிருக்கும் குறைகள் கணக்கிலடங்காதவை;!
ஆயிரம் கடவுள்கள்..!
ஆயிரம் வேதங்கள்..!
எல்லாம் உண்மையும் பொய்யுமாய் -!
மனிதம் கொள்ளவும் துணிகிறதே என்ற - உதாரண வலிகள்!
அறிவை உருத்தாமலில்லை;,!
காற்றினைப்போல் - நறுமணம் போல் - மின்சாரம் போல் -!
கண்ணில் படாது எங்கிருந்தோ - இயங்கும்!
ஒரு இறைமையின் உணர்வு -!
உள்ளே ஊடுருவி உயிரைத் துளைத்தெடுக்க;!
இடையே -!
எது உண்மை..? யார் சரி..?!
யாரை வேண்டுவது..? எப்படி வேண்டுவது?!
யாரை அறிவது? எப்படி நாடுவது?!
எங்கிருக்கிறேன்? என்ன செய்கிறேன்?!
எதற்கு பிறந்தேன்? ஏனிந்த வாழ்க்கை?!
என்ன நரகமிது இறைவா யென!
நெஞ்சு கணக்கையில் -!
ஜென்மம் செத்து செத்து பிழைப்பதின்னும் - எத்தனை காலத்திற்கோ???????!!!!!!!!!!!!!
நீள நெடுக்களிலெல்லாம் போராட்டம். மரணம். கொலை. கொள்ளை..!
இன்னும் எத்தனை இலங்கை(?) எத்தனை பாலஸ்தீனம் (?)!
எத்தனை காஸ்மீர் ?? எத்தனை மனிதர்கள்???!
எத்தனை மரணத்தை - மண் தின்று மிஞ்சுமோ உலகத்தீரே??????!!!!!!
நரம் தின்னத் தயங்கும் மனிதம்!
உயிர் குடித்து -வெற்றியென கர்ஜிகையில் -!
இன்னும் எத்தனை காலங்கள் - இப்படி!
இரத்தமாய் சொட்டித் தீருமோ(?)!!
வெறும் செத்து மடிவதும் –!
சாகப் பிறப்பதுமா!
வாழ்கை?!
எனில் – சாவதற்கும் வாழ்வதற்குமேடையே!
மரண வாசத்தில் நொடிகள் நகர்வதா - காலமாற்றம்????!
“ஏதோ ஒரு பயம் -!
எப்போதோ ஒரு சந்தோஷம்:!
ஏதோ ஒரு பதட்டம்-!
எங்கோ ஒரு நிம்மதி:!
எத்தனை எத்தனையோ தோல்வி -!
யாரோ இழந்த வெற்றி:!
எதற்கோ கவலை-!
எப்படியோ ஒரு சிரிப்பு;!
“எது பாதையென்றே தெரியாமல் பயணம் -!
எதையோ எட்டிவிட்டத் திமிர்;!
எதுவுமே நிலைமாறாத வேதனை!
மீண்டும் எல்லாம் பெற ஆசை - யென!
வெறும் சில்லறை சப்தங்களாக தான்!
நகர்கிறது வாழ்கை
வித்யாசாகர்