அறிவு தரும் ஆனந்தம்.. என் தாய் வீடு.. சமைக்கிறவன் சொல்லாத கதை!
01.!
அறிவு தரும் ஆனந்தம்!
------------------------------!
உலகே உலகே காது கொடு!
ஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு!
மனமே மனமே பாடுபடு – படிப்பால்!
வாழ்வை வென்று எடு!!
படிக்கப் படிக்க வளர்ந்துவிடு!
எம் வறுமைக் கோட்டை யழித்துவிடு!
ஏழை எளியவர் துயரத்தை – அறிவுக்!
கண்ணைத் திறந்தே யொழித்துவிடு!!
படிப்பு கொடுக்கும் தைரியத்தில்!
பட்டம் சுமந்துக் காட்டிவிடு!
படிப்பால் நாளை உலகத்தின்!
பசுமைப் போற்ற முயற்சி யெடு!!
சேர்த்து சேர்த்து வைத்தப் பணம்!
வீடு போனால் போனதுதான்!
படித்து உழைத்துப் பெற்றக் கல்வி!
ஒரு கடுகும் குறையாதுக் காத்திடுமே!!
மிரட்டி மிரட்டிப் போகின்றார் – உலகை!
கல்லார் மிரட்டி வாழ்கின்றார் –!
என்னாளென்றுத் தெரியாது – வெளிச்சம்!
எம் கல்வியாலன்றுப் பிறந்திடுமே!!
பாடம் சுமக்கும் மாணவரே!
காலம் சுமக்க வாழ்பவரே !
உடம்பை சுமக்கும் நத்தைப்போல்!
எம் தேசம் சுமந்து நடப்பவரே!!
உறங்கா கடலின் அலைபோலே!
உழைத்து உயரும் மழலைகளே!
விரிந்த வானக் குடைபோலே!
மண்ணைக் காக்கப் போகும் மறவர்களே!!
மாறும் மாறும் உலகமெலாம்!
மாற்றிப் போடப் படித்திடுவோம்!
மாறுதல் காணும் ஒருதினத்தில் !
நல்லோர் வாழக் கற்றிடுவோம்!!
!
02.!
என் தாய் வீடு.. !
------------------------!
முன்பெல்லாம் எனக்கு!
அம்மா என்று அழைக்கவாவது!
ஒருத்தி இருந்தாள்;!
என்றேனும் அவளைப் பார்க்கப்!
போகையில் மாத தவணையில் பணம் கட்டியேனும்!
எனக்கொரு புடவை வாங்கி!
வைத்திருப்பாள்;!
முடியாவிட்டாலும்!
எழுந்து எனக்குப் பிடித்ததை!
பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள்;!
உதவி செய்யப் போனால் கூட!
வேண்டாண்டி இங்கையாவது நீ!
உட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்குத் தர யாரிருக்கா? என்பாள்.!
என்னதான் நான் பேசாவிட்டாலும்!
இரண்டொரு நாளைக்கேனும்!
எனை அழைத்து எப்படி இருக்க..!
என்னடி செய்த..!
உடம்பெல்லாம் பரவாயில்லையாயென்று கேட்பாள்;!
இப்போது எனக்கென்று யாருமேயில்லை.!
நானெப்படி இருக்கேனோ என்று!
வருந்த அம்மா போல் யார் வருவா???!
அவள் ஊட்டிவளர்த்த சோறும்!
கட்டி அனைத்த அன்பையும் தர!
அவளைப்போல் இனி யாரிருக்கா???!
அம்மா இல்லாத வீடென்றாலும்!
எப்பொழுதேனும் அங்கேச் சென்று!
அவள் இருந்த இடத்தை, அவள் தொட்டப் பொருட்களை யெல்லாம்!
தொட்டுப் பார்க்க நினைப்பேன்,!
எனக்கென்று அங்கே ஏதேனும்!
வாங்கி வைக்காமலாப் போயிருப்பாளென்று கூட நினைப்பேன்.!
ஒரு சொட்டுக் கண்ணீராவது!
விட்டுத் தானே போயிருப்பாள்’!
இல்லாவிட்டாலென்ன, பொருளென்ன பொருள்!
எனக்கென்று அவள்!
அங்கே எத்தனை நினைவினை சேர்த்துவைத்து!
அழுதிருப்பாள்?? அந்த ஒரு சொட்டுக்!
கண்ணீரேனும் ஈரம் காயாமல் எனக்காக இருக்காதா? என்றுத்!
தோன்றும்.!
ஆனால் –!
எத்தனை இலகுவாகச் சொல்கிறதுயென் வீடு!
அம்மா இல்லாத அந்த வீட்டில்!
உனக்கென்னடி வேலை'யென்று!!!
!
03.!
சமைக்கிறவன் சொல்லாத கதை
வித்யாசாகர்