இறைவாழ்வு.. ஒரு கோப்பை - ந.அன்புமொழி

Photo by FLY:D on Unsplash

இறைவாழ்வு.. ஒரு கோப்பை தேனீர்..!
-----------------------------------------!
01. !
இறைவாழ்வு!
..............!
பசித்து பசித்து!
வலியால் வதங்கும் !
உடல்களுக்கிடையில்,!
பசித்து பசித்து !
வலித்துச் சுருங்கும் !
குடல்களுக்கிடையில், !
முட்டிமோதி !
முடிந்த வரை !
போராட்டம்.!
வலியினை !
ஏற்று !
இயன்றவரையில்!
உயிரினைக் காக்க!
தொடர் போரில் !
இறைவன். !
தன் மாபெரும்!
மனிதப் படைப்பு!
மடிந்துவிடக்கூடாதே!
என்று..!
மொழியாம் மதமாம் !
இனமாம் தாய்மண்ணாம்.!
இதில் மதச்சிறப்போ ?!
இறைவன் வகுத்தளித்த!
வழிமுறையாம்.!
பல கடவுள்களாம்!
பல மதங்களாம்!
பல மதவுட்பிரிவுகளாம்.!
இவைகளுக்குள்!
சண்டைகள்!
வன்முறைகள்!
படுகொலைகள்.!
ஓ !
மாண்புமிகு மனிதயினமே..!
இறைவனுக்கு நீங்கள் !
இன்பத்தைத் தான் !
தரவில்லை..!
தயவுசெய்து !
துன்பத்தைத் தராதீர்கள். !
இறைவன் !
மனம் தளர்ந்தால்..!
இறைவன் !
மனம் தளர்ந்தால்..!
பேரிழப்பு.!
பேரழுகை.!
பேரழிவு. !
நிச்சயம்..!
நிச்சயம். !
பசிக்கும் வலியின் !
உடமையாளர்களுக்கல்ல.!
02. !
ஒரு கோப்பை தேனீர் !
..........................!
காலை எழுந்து !
கடன்களை முடித்து,!
கசக்கியதை கட்டி !
குளித்தும் கூழின்றி, !
ஒப்பனையில் ஒளிந்து!
கல்லூரி கிளம்பினாள் !
அவள்.!
கரும்பாய்!
பேரூந்தில் நுழைந்தவள்!
சக்கையாய் வெளிப்பட்டாள்!
கல்லூரி வாசலில்.!
புதிய தமிழில் ஆய் ஆய்கள், !
விசாரிப்புகளாம்..!
பேரூந்தால் தாமதம் !
வேகமாய் நடந்தால்!
உடன்படிப்பவன் !
கல்லூரி வாசலில்,!
அதே ஆய் ஆய்.!
என்ன தாமதமா? அவன்!
சாப்பிட தாமதமாகியது அவள். !
ம்.. நீ கொடுத்து வைத்தவள்!
ஏன்!
சாப்பிட்டு வருகிறாயே!
இரண்டு வயிறுகளும் !
ஏளனமாய் சிரித்தன!
இரண்டு முட்டாள்களை நினைத்து.!
ஆம் இரண்டுமே பொய்கள்.!
சரி கூட வாயேன் சாப்பிட்டு வரலாம்!
அய்யய்யோ நான் வரலப்பா.. !
ப்ளீசு!
சரி டீ வேண்டும்னா சாப்பிடறேன். !
அதுவும் சொல்லிடறேன் !
என்னிடம் பணமில்ல!
அந்த கவல உனக்கெதுக்கு !
நீ வந்தால் போதும்,!
சரி ஒரு நிமிடம் இரு வந்துடறேன்!
கல்லூரிக்குள் ஓடியவன் !
கடன் காரனாக திரும்பி வந்தான். !
வா போகலாம்!
கல்லூரி சினிமா அரசியல் என !
தேனீர் கடையில் தேவையில்லா பேச்சுக்கள். !
இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தவள் !
மகிழ்வோடு அருந்தினாள், !
கொஞ்சம் கொஞ்சமாய்!
பார்த்து பார்த்து!
உறிஞ்சி உறிஞ்சி!
சுவைத்து சுவைத்து,!
ஒரு கோப்பை சிறப்புத் தேனீரை. !
மயக்கம் தெளிந்து நிமிர்ந்து அமர்ந்தது !
அவளின் பரிதாப வயிறு. !
அநிச்சையாய் நடைபெறும்!
இவ்வளவு பெரிய நாடகம் !
ஒரு !
தேனீருக்குத்தானென்பது !
இங்கு எந்த (..........க்கு) !
இழிவுக்குத் தெரியப்போகிறது !
இவளையும் சேர்த்து.!
வெறுத்துப் பேசியது!
அவளின்!
வலிக்கும் வயிறு.!
!
அன்புடன்!
ந.அன்புமொழி!
சென்னை
ந.அன்புமொழி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.