காதலிக்கத் தெரிந்த!
உனக்கு!
சாதிக்கத் தெரியாமல்!
போனது எப்படி...!
இருட்டு வலையத்துள்!
இருந்துகொண்டு!
வெளிச்சம் வர !
மறுப்பதாய் சொல்லி!
வெதும்புகிறாயே நியாயமா..!!
ஆரம்பமே!
மெர்குரியாய் பிரகசிக்க!
ஆசை கொள்பவனே!
மெர்குரியை மறந்து!
ஓர் மெழுகுவர்த்தியை!
முதலில் தேடு.!
இருட்டை நீக்க!
தீப்பந்தம் தேவையென!
கேட்கும் உன் மனதிற்கு..!
தீக்குச்சி இருப்பதை!
சொல்லிக்கொடு.....!
பின்!
நீ நினைக்காமலேயே!
எல்லாம் நடக்கும்!
மெர்க்குரி வெளிச்சத்தில்

தென்றல்.இரா.சம்பத்