ஒவ்வொரு பேருந்து பயணத்திலும்!
ஒவ்வொரு தொடர்வண்டி பயணத்திலும்!
குந்த இடமில்லாமல்!
முதுகில் புத்தகத்தை சுமந்து!
நிற்கும் பிள்ளைதாச்சி மாணவர்கள் !
முதுகு பைகள் கர்ணகவசம்!
கழற்றி வைக்கப்படுவதில்லை!
குந்திகளின் மூக்கை அறுக்கும்!
பின்னாலிருப்பவரின் வயிற்றை அமுக்கும் !
மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம்!
மற்றவர்களுக்கு பாடாய்படுத்தும் கவசம்!
கூட்டம் அதிகமாக இருந்தாலும்!
முதுகுபைகள் கும்மியடித்து கொண்டிருக்கும் !
இந்த கர்ணர்களை கண்டால்!
கெளவரர்களுக்கு கூட எரிச்சல் வரும்!
இறக்கி கையில் வைக்க சொன்னால்!
ராஜ்ஜியத்தை கேட்டாற்போல் முறைக்கும் !
முதுகுபைகள் எப்போது இறக்கி வைக்கப்படுமென!
தொடங்கி வைத்த படையப்பாவுக்கே தெரியாது !

வி. பிச்சுமணி