காலம் அவளை தேடிக்கொண்டிருக்கிறது.. மழையில் நனையாமல்!
01.!
காலம் அவளை தேடிக்கொண்டிருக்கிறது.!
--------------------------------------------!
வானம் அழகாயிற்று!
நட்சத்திரங்கள் வர்ணமாய் ஒளிர்ந்தன.!
கூதல் காற்றில் இசைலயம் சேர்ந்தது!
அவள் முகத்தின் புன்னகை!
நிலவாகி ஒளிர்ந்தது.!
மின்மினி பூச்சிகளும்!
பாடும் பறவைகளும்!
அவளுக்கு தோழியாகின!
காலங்கள் தனக்காக காத்து நிற்பதையும்!
கனவுகள் தன்னை பிரதி செய்வதையும்!
வானம் தன் அழகை பூசிக்கொள்வதையும்!
அவளால் உணரமுடிந்தது.!
அவள் இதயத்தில் இருந்து!
எக்காலத்திலும் அழியாத!
காதலின் இசை!
ஊற்றெடுக்க தொடங்கியது!
வானமு்ம் நதியும் பறவைகளும்!
காடும் அவள் பாடலை மீளவும் பாடின----!
அந்த இசையில் மிதந்து கொண்டிருந்த!
ஓர்நாளில் அவள் காணாமல் போனாள்!
இரவும் வானமும்!
தென்றலும் மின்மினிகளும்!
அதற்கு பின்!
அமைதியாய் இல்லை!
அவளைத்தேடி!
அலைந்து கொண்டிருந்தது.காலம்.!
02.!
மழையில் நனையாமல்!
-------------------------------!
இன்று காலையில் இருந்து!
மழை பெய்து கொண்டிருக்கிறது.!
அலுவலகம் செல்ல வேண்டும்!
மழையில் நனையாமல் செல்வதெப்படி.!
குடையெடுத்துப்போகலாம்!
தற்போதிருக்கும் குடைகள்!
சந்திக்குப் போகுமுன்!
நம்மை நனைத்துவிடும்!
றெயின் கோட் போடலாம்!
பார்ப்பவர்கள் நினைப்பார்கள்!
நனையாமல் போகிறோம் என்று!
அங்கு போனபின்!
நாம் நன்றாக நனைந்திருப்போம்!
மழையின் இடையே போகலாம்!
என்கிறான் முத்தவன்!
இந்த மழை உங்களை யொன்றும்!
கரைத்து விட போவதில்லை!
என்கிறாள் சின்னவள்!
வெளியே எட்டி பார்க்கிறேன்!
மாடு ஒன்று ஒன்றையும்!
சட்டை செய்யாமல்!
நனைந்தபடி செல்கிறது
வேலணையூர்-தாஸ்