காத்திருக்கிறேன்!
01.!
கனவிலே வாழ்தல்!
-------------------------!
நிலவொளியில் பனைவெளியில்!
நீண்ட மணற்பரப்பில் காலாற நடப்பதாய்!
நண்பருடன்!
கவிதை கதை இலக்கியம்!
மனம் நிறைய பேசி மகிழ்ந்து களிப்பதாய்.!
பொங்கும் கடலலை குளித்து!
கடல்நுரை அள்ளி களித்து!
துய காற்றிழுத்து நுரையீரல் நிரப்பி!
சுதந்திரமாய் பறப்பதாய் !
எங்கும் மலர்ந்த முகமாய் நட்பொடு பேசி!
ஆண் பெண் சமநீதி அமர்ந்த தேசத்தில்!
அன்பொன்றே மொழியாய் அமைந்த வெளியொன்றில்!
இன்புற்றிருப்பதாய்.!
போட்டி பொறாமை வஞ்சகம் தான் நீங்கி!
புத்தம் புதிதாய் பூமியிலே பிறப்பதாய்!
என்னுள்ளே அடிக்கடி கனவு வரும்!
அந்த நிமிடம் மனது குது கலிக்கும்!
ஆனந்தம மேலோங்கி உயிர் பறக்கும்.!
மீண்டும் விழிப்புவரும்.!
நான்கு சுவருள் அகப்பட்டு!
நுரையீரல் காற்றுக்காய் ஏங்கும்!
எழுந்த அவசரத்தில் உயிர் இயங்கும்!
நகர வாழ்வில்!
இயந்திர வாழ்க்கையில்!
மகிழ்ச்சி தொலைத்த ஜடமாய்...!
!
02.!
கனவுலகில் காத்திருக்கிறேன்!
--------------------------------------!
உன் நினைவு நெருப்பில்!
தகிக்கிறது நெஞ்சம்!
பனியிலும் வேர்க்கிறது!
பாவை மேனி!
நிலவும் சுடுகிறது!
நீ அருகில் இல்லாமல்!
பாலும் கசக்கிறது !
உன் பார்வை பருகாமல்!
மனமெங்கும் குளிர் நிறைக்கும்!
உன் புன்னகையில் தோயாமல்!
நீர் இன்றி வாடும் பூச் செடியாய்!
நீர் இன்றி துவள்கிறது மனது!
விழி வாசல் முடி!
கனவுலகில் காத்திருக்கிறேன்!
கனவிலாது வந்து !
என் காதலுக்கு நீர் ஊற்று!
கனவில் உன் முகம் கண்டு மகிழ்கிறேன்!
கருகும் என் உயிர் மீட்கிறேன்
வேலணையூர்-தாஸ்