அசைந்தாடும் மரமே,!
நீ அசைந்தாடி என் மேனி முழுக்க பரவசப்படுத்துகிறாய்..!
நினைத்தேன் -நீ காற்றை தந்து மனம் மகிழ்விக்கும் மகா வள்ளல் என்று,!
உணர்கிறேன் -யான் கண்ட குட்டி அனுபவங்களால்,,!
நீ உன் மனம் குளிர!
கிளைக்கரம் உதரி-!
உன் களைகளான காய்ந்த சருகுகளை அகற்றுகிறாய் அல்லவா?!
நானும் என் மனத்தை கீரி களைகள் தேடுகிறேன்,!
காயம் தான் மிச்சம்,!
தேடிய களைகளை காணவில்லை..!
சடத்துவம் இல்லா ஒரு வெறுமை-!
உள்ளத்தின் ஒரு டம்மி வெடிப்புக்குள்..!
ஒரு வெளிச்சம் புகாதா?!
ஏங்குகிறது -நீரின்றி கண்ட கோடை வரட்சி...!
ஒரு மின்மினி பூச்சியும் இனி கதிரோன் தான்-!
இவ்வவலநிலை தொடர்ந்து விட்டால்..!
என் இரவுக்கும் ஒரு சூரியன் வராதா??!
அணை கடந்த வெள்ளமாய், பல சிகிச்சைகளுடன் -ஒரு கன்னி மனது
துர்ரத் புஷ்ரா