பயங்கரவாத வெறியாட்டம்!
பலியாயினர் அப்பாவிகள்!
இலங்கையில் குண்டுவெடித்து!
இருநூறு பேர் சாவு!
இஸ்ரேல் ஏவுகணை வீச்சு!
இழப்பு சில உயிர்கள்!
இராக் குழந்தைகள்!
ஏராளம் மரித்தன!
உணவின்றி!
எல்லாமே செய்தியென்று!
இருந்துவிட்டுப்போக...!
பக்கத்துவீட்டில்!
திடீரெனச் செத்தவனோ!
பாதி ராத்திரியில்!
எழுந்து வருகிறான்!
என் தூக்கம் கலைப்பதற்கென்றே!!
---------------------------!
முற்றுப்புள்ளிகளை கொஞ்சுபவர்களே!!
சற்றேனும் கற்றுணருங்கள்:!
வாக்கியத்தின் இனிமை!
முற்றுப்புள்ளியில் இல்லை.!
நீளமான வாக்கியத்தை!
நினைத்தேங்குபவர்களே!!
சிறிய வாக்கியமும்!
சிறப்புப் பெறுவதுண்டு!
குறளைப் போல!
எல்லா வாக்கியங்களுக்கும்!
இருக்கிறது ஒரு முற்றுப்புள்ளி!
என்று சொல்பவர்களே!
இருங்கள்,!
இடைநிறுத்தக் குறி!
ஒருபோதும் முற்றுப்புள்ளியாவதில்லை.!
-- !
H.FAKHRUDEEN!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)!
+966 050 7891953

இப்னு ஹம்துன்