தூரத்து விண்மீன் கண் சிமிட்ட,!
நிலா வந்து காதினுள்ளே ஏதோ சொல்கிறது.!
தோட்டத்து மல்லிகையும் பூத்திருக்கும் அவ்வெளை,!
ராணியாம் 'நைட் குவினும்'!
விசுறுகிறது சுகந்தத்தை...........!
நித்திரையில் ஆழ்ந்திருந்த பிஞ்சிவளின் அமைதிதனை!
கொஞ்சம் குழப்பிடுவோம் என்றவைகள் நினைத்தனவோ........!
இல்லை,!
ராப்பொழுதின் ஜீவிகளாம் எம்மோடு விளையாட!
சுட்டிப் பெண் இவளேதான் பொறுத்தமென கருதியதோ.........!
கானல் நீராய் தொலைவினிலே!
காரிகைகளின் சிரிப்பொலியோ கலகலவென.........!
துள்ளியெழுந்து ஜன்னலூடே அண்ணாந்து பார்க்கின்றேன்,!
காணவில்லை?!
யாரும் அங்கே கண்ணாமூச்சி விளையாடியதோ?!
இல்லை,!
விடுதி வாழ்க்கையின் நினைவலைகள் என்னை வாட்டுகிறதோ?!
மறக்கத்தான் முடியுமா!
சிநேகமான நாட்கள் தனை-!
அறிவுப்பசியால் எமை இணைத்த காஷ்மீர் விடுதி தனை.!
பரந்து விரிந்த வீரமரங்கள் தாளம் போட,!
சீனியாஸ் செடிகள் பூத்துக்குழுங்க,!
விதவிதமாய் குருவிகளும் கானம் பாட......!
அன்று நாம் ரசித்துப் பழகிய சூழல் அது தானே?!
நாம் காணா பௌர்ணமியும் அங்கில்லை-!
அதுபோல, மழை ஓய்ந்து எமை காணா வானவில்லும் இல்லை........!
வண்ணதுப்பூச்சிகளின் ஆரவாரம்,!
சின்னஞ்சிறு வண்டுகளின் ரீங்காரம்!
கேட்காத நாளும் இல்லை அப்போ-!
அதை கேட்காமல் தூக்கம் இல்லை இப்போ.......!
நகரத்து சுடும் வெயிலுக்கு 'டாடா' காட்டி,!
இனிய குளிர் பொழுதுகளை 'வெல்கம்' பண்ணி!
எம் வாலிப வயதுக்கு ஒத்துப்போக!
படிக்கும் நேரத்தில் எமை உற்சாகமூட்டி!
எம்மோடு ஒன்றாய்!
பின்னிப்பிணைந்த நீ தான் நம் சின்ன காஷ்மீர்!! !

துர்ரத் புஷ்ரா