காலம் கடந்துகொண்டே!
இருக்கிறது.........!
இதோ நீ வருவதற்கான!
சில மணித்துளியின்!
இடைவெளியில் நானிருக்கிறேன்!
நம் பழைய காலங்களை!
மனதோடு புரளவிட்டு.........!
எவ்வளவோமுறை!
தாண்டக்கூடாத எல்லைக்கோட்டை!
சாதாரணமாய் கடந்திருக்கிறோம்!
கடந்து வந்த!
நிமிடங்களை நினைக்கும்போது!
சின்னதாய் சிறகு கூட!
முளைத்துவிட்டது எனக்கு!
அவ்வளவு சந்தோஷம்...!
நாம் மட்டுமே உணரும்!
அந்த சல்லாப நாட்கள்!
அடிமனதோடு அப்பிக்கிடக்கும்!
சந்தோஷ நிமிடங்கள்!
நாம் இனிக் கடக்கும்!
எல்லாக் காலங்களையும்!
நனைத்திருக்க வேண்டும்!
அந்த நிமிடங்களிலிருந்து!
நமை விடுவித்துக்கொண்டு!
காலம் கடத்த முடியுமா!
நினைக்கும்போதே கனக்கிறதே....!
நீர்வீழ்ச்சி!
நிமிடங்களின் நிகழ்வுதான்....!
நம் நிகழ்வுகளும் அதுமாதிரிதான்!
எல்லாம் ஒரு நிமிடத்திலேயே!
நிகழ்ந்து-ஆனால்!
எப்போதும் நம்மை!
நனைத்தபடியே இருக்கிறது!
இருக்கவும் வேண்டும்...!!
சகியே.....!
என் சுகமே.........!
சீக்கிரம் வா...!
வார்த்தைகள் நின்றுவிட்டது!
உன் வரவுக்காக.....!!
- தென்றல்.இரா.சம்பத்
தென்றல்.இரா.சம்பத்