சுனாமி கவிதைகள் - s.உமா

Photo by Maria Lupan on Unsplash

ஜெயித்த பூதகி!
கடலே !!
நீ பாதகி! !
ஜெயித்த பூதகி!!
ஆயிரமாயிரம் மீனவர்க்கு!
அமுதூட்டுவதாய் அணைத்து !
அழித்தப் பாதகி...!
ஜெயித்த பூதகி...!
!
நிலவே!
நீ பொய்!
உன் ஒளி பொய்!
கடலோடு கலந்த!
உன் மோகனம் பொய்!
உன்னில் லயித்த எங்கள்!
இன்பம் பொய்!
உண்மை....!
நேற்றய கனவு!
இன்றில்லா!
வெறுமை...!
நேற்றய இன்பம்!
இன்றில்லா!
துன்பம்...!
நன்மை...!
புதைந்து போன!
சேற்றிலே !
புதிதாய் முளைத்த!
மனிதநேயச் செடி...!
நம்பிக்கை மலர்கள்!
பூக்க!
நேற்றையச்சோகம்!
நாளைய!
வரலாறாகும்
s.உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.