உன்னைப்போல்.. ஆடியபாதம் - பத்மா சுவாமிநாதன்

Photo by FLY:D on Unsplash

உன்னைப்போல் ஒருவன்...!
01.!
உன்னைப்போல் ஒருவன்!
-------------------------------------!
காகம் !
இறந்துபோனால்!
கலவரமாகுது - எங்கள்!
மொட்டைமாடி...!
நாயொன்றின் !
உயிர்பிறிந்தால்!
நள்ளிரவு நண்பர்களின் !
ஒப்பாரி...!
ஓலைப்பாம்பொன்று!
உயிர்துறந்தால்!
ஒட்டுமொத்த பாம்புகளின் !
அணிவகுப்பு...!
எறும்புகூட!
தன் துக்கத்தை!
இயல்பாய்!
எடுத்துரைக்கும்...!
காக்கைக்கும்!
நாய்க்கும்!
எறும்புக்கும்!
உள்ள குணம்...!
தமிழனுக்கு!
ஏனோ இன்னும்!
தட்டுப்படவே!
இல்லை...!
தனது இணம்!
வேரருக்கப்படுவதை!
எந்த இனமாவது!
பார்த்து ரசித்ததுண்டா?!
கண்ணாற!
கண்டோம்...!
காதாற!
கேட்டோம்...!
இலங்கையில்!
நடந்ததை!
இறையாண்மை!
என்றோம்...!
இந்த மண்ணில்!
நடக்கும்போது!
எதைசொல்லி!
தவிர்ப்போம்...!
மாணவன்!
தாக்கப்படுவான்!
என்றதும்!
பொடா பாய்ந்ததே...!
எங்கள் மீனவன்!
தாக்கப்படும்போது!
ஏன் எதுவுமே!
பாய்வதில்லை?!
மனித உரிமை!
கழகமென்ன!
மன்னையா!
தின்கிறது?!
மந்திரி பதவிக்கு!
மட்டும்!
டெல்லிக்கு போகும்!
தந்திரக் கிழவன்...!
தமிழன் உயிரென்றால்!
தந்தியும் கடிதமும்!
அனுப்புவானாம்?!
அதை மத்திய அரசு ஏற்க்குமாம்... !
முத்துக்குமாரின்!
மரணத்தை அரசியலாகினார்களே...!
ஏன் மீனவன் சாவை!
கையிலெடுக்கவில்லை...!
கேட்டுகொண்டே போக!
கேள்விகள் ஆயிரமுண்டு...!
கேட்கும் யோக்கியதை!
எனக்கென்ன இருக்கிறது...!
நானும்!
உங்களைப் போல்!
ஒருவன் தானே...!
02.!
ஆடியபாதம்...!
-------------------------!
அவர்தான் எங்கள்!
தமிழ் ஐயா...!
தமிழென்னும் சலங்கைகட்டி!
தனக்கென்ற பாணியிலே!
தரைபடாமல் ஆடியபாதம்...!
...!
தேமாவும், புளிமாவும்,!
அணி வகையும்,!
திருக்குறளும்,!
அவைபொருளும்...!
திகட்டாமல் விருந்தளிப்பார் - கணீர்குரலில்...!
ஐம்பெரும் காப்பியம்,!
அகநானூறு, புறநானூறு!
எட்டுத்தொகை, பத்துபாட்டென...!
தலையில் தட்டியே சொல்லித்தருவார் - அந்த!
தடித்த மீசைக்காரர்...!
நேர்கொண்ட பார்வையும்,!
நிமிர்ந்த நடையும்,!
முறுக்கிய மீசையும் - நன்கு!
மழித்த கன்னமும்...!
ஓங்கிய குரலும்!
வெள்ளை உடையும்!
எப்போதும் எளிமையுமென - அப்படியே!
மனதில் நின்றார்...!
அவர் நடத்திய பாடம்போல.!
எப்போதுமே ஹீரோதான் அவர்...!
விடைத்தாள் தருகையில் மட்டும் வில்லனாக காட்சிதருவார்...!
இவரும் சராசரி என்றே நினைத்துவிட்டேன் - சிறுவன்தானே நான்.!
எட்டாம் வகுப்பு படிக்கையிலே!
தமிழ் மன்றத்தேர்வு...!
காய்ச்சல் எனக்கு - இது தேர்வு காய்ச்சலல்ல...!
எல்லோரும் வந்திருக்க - என்னை தேடியவர்!
தன் மிதிவண்டி தந்து!
என் நண்பனை அனுப்பிவிட்டார் வீட்டிற்கே...!
ஐயாவே ஆளனுப்ப!
புறப்பட்டேன் பரிட்ச்சைக்கு...!
எழுதவும் செய்தேன் - அவருடைய பேனாவிலேயே...!
எத்தணை பேருக்கு கிடைக்குமோ அந்த வாய்ப்பு?!
என்னை பொறுத்தவரை!
அது வாய்ப்பல்ல - வரமே!!!!
வருடங்கள் ஓடின...!
வயதும் ஆனது...!
காலத்தின் கட்டளை - அம்மாமனிதனை!
மீண்டும் சந்திக்க...!
பேருந்திலே பார்த்தேன்!
ஐயா நலமா என்றேன்?!
சற்று நெருங்கிவந்தே!
இணம்கண்டார் - நான்தான் என்று!
ஏ... சோழியவிளாகத்து கெடா...!
இப்படித்தான் எனை அழைப்பார் - மகிழ்ச்சியில் இருக்கையிலே...!
இன்றோ...!
மங்கிய பார்வை...!
தொங்கிய தோள்கள்...!
குன்றிய குரல் என!
வயோதிகனாய் காட்சிதந்தது - என் தமிழ்...!
அப்போதுதான் சொல்லநினைத்தேன்!
ஐயா வணக்கம்...என்று!
பள்ளியில் எழுந்து நின்று!
சொன்னதுபோல...!
உனக்கல்லவா சொல்லவேண்டும்!
என் முதல் வணக்கம்...!
இந்த காட்டானையும் கிறுக்கவைத்த - தமிழ்க்!
கடவுளல்லவா நீ எனக்கு...!
உன் பொர்ப்பாத கமலங்களில் - என்!
படைப்புகளை சமர்ப்பிக்கிறேன்
பத்மா சுவாமிநாதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.