ஏதோ ஒரு கவிதையின்!
கிறுக்கலில் -!
கொட்டிவிட இயலாத!
உணர்வின் மிகுதியில்!
நனைகிறது மனசு.!
காதல் கடந்து!
வாழ்க்கை கடந்து!
இறந்த பாட்டி தாத்தாவிலிருந்து!
இறக்கப் போகும் அப்பாம்மா வரை!
எண்ணி அழுகிற பலரில்!
என்னையும் ஒருவராய்!
வைத்துக் கொள்ளுங்கள். .!
யார் யாரையோ தேடி!
எங்கெங்கோ அலைந்து!
என்னெனவோ செய்து -!
எதிலுமே நிலைக்காத புத்தி!
என் தவறா தெரியவில்லை.!
மனதின் போக்கு நீளும்!
அத்தம் வரை -!
கண்ணீரே.. கண்ணீரே.. வென !
கடக்கிறேன் பொழுதுகளை!
எதற்கென்றே தெரியாமல்.!
இன்னும் -!
என்னென்னவோ வலிகள்!
எப்படி சொல்வதென்றே தெரியாமல்!
கனக்கிறது உள்ளே.!
அத்தனையையும் !
வெளியில் சொன்னால் -!
உலகம் வெகு இயல்பாய்!
அவனொரு 'சைக்கோ' என்று!
சொல்லிவிட்டு -!
தன்னை சரியென்று மெச்சிய கம்பீரத்தில் !
மேலேறி சென்றுவிடும்.!
மனிதர் மெத்தனமாய் இருப்பது!
மொத்தமும் புரிந்தும் -!
போகட்டும், எதற்கோ வீண்!
சிந்தனை என்று அலட்டிக்!
கொள்ளாமல் விடாதலில் -!
தனிமை கொன்று வீழ்த்தியும்!
யாருடமே பேசுவதில்லை நான்.!
உண்மையில் -!
எனக்கான கவலையென்ன?!
உணவோ!
உடையோ!
சுகமோ துக்கமோ என்றால் -!
பளீரென இல்லை என்று தலையாட்டலாம்.!
பிறகென்ன; ஏனிந்த !
பிதற்றல் என்கிறாயா............?!
என் கவலைகள் மொத்தமும்!
நீ - எனில்!
ஏற்ப்பியா என் சமூகமே??? !
வித்யாசாகர்