உறங்கும் நேரங்களில் !
விழித்துக்கொண்டும், !
விழிக்கும் நேரங்களில் !
உறங்கிக்கொண்டும், !
இருந்திருக்கமாட்டேன்! !
பசி நேரம், ருசி காரம் !
எனக்கும் கூட !
மறந்துபோகுமென்று உணர்ந்து !
இருந்திருக்கமாட்டேன்! !
வைரமுத்துவையும், வாலியையும் !
இத்தனை அதிகமாய் விரும்பி !
இருந்திருக்கமாட்டேன்! !
சோகப் பாடலின் !
வரிகளையெல்லாம் !
இவ்வளவு வேகமாய் !
என் மனதில் பதித்து !
இருந்திருக்கமாட்டேன்! !
நொடியில் கடந்துபோகும் !
உன் கடைக்கண் பார்வைக்காக !
யுகங்களை வீணாக்கி !
இருந்திருக்கமாட்டேன்! !
சாதாரணமாக நீ சிந்தும் !
வார்த்தைகளுக்கெல்லாம்; !
ஆயிரம் அர்த்தங்கள் சேர்த்து !
ஆனந்தித்து இருந்திருக்கமாட்டேன்! !
உனக்கு திருமணம் -என்று !
உன் பெற்றோர் வைத்த !
பத்திரிகையை படிக்காமல் !
இருந்திருக்கமாட்டேன்! !
உன் கணவரோடு !
நீ நிற்கும் காட்சியை கண்டு; !
உதடுகளில் புன்னகை படர, !
உள்ளத்தில் அழுது கொண்டு !
இருந்திருக்கமாட்டேன்! !
சத்தியமாக, எனக்குள்(ளும்) !
உறங்கிக் கொண்டிருந்த !
கவிஞனின் உறக்கத்தை !
ஒருநாளும் கலைத்து !
இருந்திருக்கமாட்டேன்! !
--ஷீ-நிசி
ஷீ-நிசி