ஆசையாகத்தானிருக்கிறது!!
ஆசைகளை எல்லாம்!
உன்னிடம் சொல்லிவிட!
ஆசையாகத்தானிருக்கிறது!!
விடியல் தலை காட்டும் வரை!
மடியில் தலை சாய்த்துக்கொண்டு;!
நொடியும் இடைவெளியின்றி,!
பேசிக்கொண்டிருக்க!
ஆசையாகத்தானிருக்கிறது!!
மங்கிய நிலவொளியில்!
பொங்கிய சாதத்தை!
இங்கிதம் பார்க்காமல்ஊட்டிவிட;!
ஆசையாகத்தானிருக்கிறது!!
கண்ணிறம் கருப்பல்லவா!!
செந்நிறம் உதடல்லவா!!!
பொன்னிறம் மேனியல்லவா!!!!
உன்னைப் பாடிவிட!
ஆசையாகத்தானிருக்கிறது!!
சோர்வோடு நீ இருக்கும்போது!
மார்போடு அனைத்துக்கொண்டு;!
உயிரோடு கலந்த உன்னைப்!
பரிவொடு விசாரிக்க!
ஆசையாகத்தானிருக்கிறது!!
பின்னால் உன்னை அமரவைத்து!
முன்னால் போகும் வாகனங்களை!
என்னால் முடிந்த மட்டும்!
விரட்டிப் பிடிக்க!
ஆசையாகத்தானிருக்கிறது!!
குளித்து விட்டு நீ தலை துவட்ட!
தௌ¤த்து விழும் அந்த துளியில்!
சிலிர்த்துக்கொண்டு நான் எழுந்து,!
அப்படியே உன்னைக் கட்டிக்கொள்ள!
ஆசையாகத்தானிருக்கிறது!!
காதருகில் வைத்த அலாரம்!
12 மணி இரவில் கதற!
அலற லோடு நீ எழும்!
அந்த தருணத்தில்!
பிறந்த நாள் வாழ்த்துக் கூறி,!
முத்தமிட!
ஆசையாகத்தானிருக்கிறது!!
நகத்தை நீ கடிக்கும்போது!
நானும் அப்படியே செய்து!
முகத்தை நீ திருப்பும்போது!
நானும் அப்படியே செய்து!
கோபத்தில் இருக்கும்!
உன்னை மேலும் கோபமூட்ட!
ஆசையாகத்தானிருக்கிறது!!
நீ சிரிக்கின்றபோது!
உனக்கு பின்பாகவும்;!
நீ அழுகின்றபோது!
உனக்கு முன்பாகவும்;!
நீ நடக்கின்றபோது!
உனக்கு பக்கமாகவும்!
என்றுமே காவலனாயிருக்க!
ஆசையாகத்தானிருக்கிறது!!
ஆசையாகத்தானிருக்கிறது!!
ஆசைகள் எல்லாம்!
உன்னுடன் நடந்துவிட,!
ஆசையாகத்தானிருக்கிறது!!
ஷீ-நிசி
ஷீ-நிசி