உறுமி எழும் - ஸ்ரீமங்கை

Photo by Gary Yost on Unsplash

உறுமியும் சலங்கையும் !
ஒரு கணம் ஒடுங்க, !
வியர்த்த முதுகில் பளீரென !
சாட்டையைச் செலுத்துபவனை !
வியந்து பார்த்து வீடியோ எடுப்பான் !
வெள்ளைக்காரன். !
அவனுடன் இருந்தவளின் !
அபரிமித அளவுகளை !
வெறித்துப் பார்த்திருக்கும் !
வேலையற்ற கூட்டமொன்று.. !
இவற்றினூடே, !
உறுமிமேளக்காரியின் !
ஒடுங்கிய முலைஉறிஞ்சி !
உறங்கும் குழந்தை !
வாய்கோணிச் சிரித்து !
அடங்கும் கை பதறி... !
கனவில் !
தனது நாளைய சாட்டையைச் !
சொடுக்கியதென
ஸ்ரீமங்கை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.