அயல் பிரிதிபலிப்புகள் - ஸ்ரீமங்கை

Photo by Paweł Czerwiński on Unsplash

இந்நடைபாதையில் !
கூவிக்க்கூவி கண்ணாடிகள் !
விற்பவனே! !
சிரிக்காதே.. !
நாங்கள் இப்படித்தான். !
ரசம் தேய்ந்த மூலைகளில் !
இறந்தகால பிம்பங்களைத் !
தேடும் எம்கண்கள். !
கண்ணாடியில் புழுதிபடிந்திருக்க !
சட்டங்களைத் துடைத்து வைப்போம் !
தன்முகம் கண்டதாக !
உண்மை எவரும் இதுவரை !
உரைத்ததில்லை. !
இருப்பினும் கண்ணாடிகளின் மேல் !
எமது மோகம் இன்னும் தீர்ந்தபாடில்லை. !
ஒருமுறையேனும் உன் கோணல் கண்ணாடியில் !
விகாரமாக மற்றவர் முகம் கண்டு சிரிக்கும் ஆசையில் !
உன்கடையருகே எத்தனை கூட்டம்? !
பண்டமாற்றாக கண்களையே !
கேட்கும் உன் விகார வியாபார !
தந்திரங்களில் அதிர்கிறேன். !
அன்றைய வியாபாரம் முடிந்ததும் !
உன்னுள்ளே நீ உரக்கப் பேசிய பேச்சென்ன? !
இருட்டியபின் முகம்பார்க்க எத்தனிக்கும் !
எம் முயற்சிகளை எள்ளிநகையாடினாய். !
காலக்காற்ரில் முகத்தில் படிந்த புழுதியை !
கண்ணாடியின் அழுக்கென !
குறைசொல்கிறோமென !
நீ கேலிசெய்தது நெருடுகிறது !
இனியும் என் வாசலில் !
கண்ணாடி விற்கக் கூவாதே. !
உன் கூவல்களில் நிரம்பி வழியும் !
என் செவிகளையும் எடுத்துச்செல் !
குருடனாக மட்டுமல்ல !
செவிடனாகவும் இருப்பதில் !
எனக்கு ஒரு கவலையும் இல்லை. !
அன்புடன் !
ஸ்ரீமங்கை !
கவிஞர் எண்: 90
ஸ்ரீமங்கை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.