பிரிவு.. பூ!
01.!
பிரிவு!
---------!
திரும்பும் இடமெல்லாம்!
நீயிருக்கிறாய் என்ற!
நினைப்பிலென் பொழுதுகள்!
விடிகிறது, இனிமையாய்...!
உன்னை ஒரு நாள்!
பார்க்கவில்லை என்றாலும்!
இந்த ஜென்மமே முடிந்த!
ஏக்கம் வருகிறது, தனிமையாய்...!
உன் இதழ்களிலிருந்து!
காற்றுடன் கலந்துவிட்ட!
வார்த்தைகள் தாய்ப்பசுவை!
இழந்த கன்று போல்!
ஒலமிடும் என் செவிகளில்...!
கண்கள் விடும் கண்ணீரில்!
மனது கனத்துப்போகும்!
உன் நினைவுகளில்...!
பூவிலிருந்து மணத்தை!
பிரிப்பது சாத்தியமெனில்!
என்னிடமிருந்து உன் நினைவுகளைப்!
பிரிப்பதும் சாத்தியமே....!
02.!
பூ!
-----!
தன்னை மட்டுமே!
சுற்றிச்சுற்றி வரும்!
நிலவுக் காதலனின்!
வரவை எதிர் நோக்கி!
நாணத்தில் முகம் சிவக்கும்!
சூரியன் மறைவாக!
மலைகளுக்குப் பின்னால்!
மறைந்து!
காதலனுடனான!
ஊடல் துவங்கும்!
தென்றல் வீசும்!
அந்திமாலை நேரத்து!
புல்வெளியில்,!
பனித்துளிகளையும்!
பூக்களையும் மட்டுமே!
தாங்கிப் பழக்கப்பட்ட!
பச்சைப்புல் இலைகளின்று!
வேரில்லா இலையில்லா!
தண்டுமில்லா ஒர்!
அற்புதப் பூ!
அவளைத் தாங்கிப்!
பெருமிதம் கொண்டன,!
மண்ணில் இத்துணை!
அழகான!
சரித்திரம் கண்டிராத!
அற்புதப் பூவைத்!
தாங்கியவர்கள் நாங்கள்!
என்றே
ராம்ப்ரசாத், சென்னை