பூமித்தாயின்!
முந்தானை பிடித்துச்!
சுற்றிச்சுற்றி விளையாடும்!
நிலவுக்குழந்தையின்!
தேய்பிறை முகங்களின்!
மற்றுமொறு பாதியை!
தூரிகையின்றி காற்றிலே!
வரைகிறாள்!
ஊஞ்சலில் ஆடிக்கொண்டே...!
அப்போது,!
காற்றிலே படபடக்கும்!
கண்ணாடிக்கூந்தலோடு!
அளவளாவி மகிழும்!
நீலத்தாவணியும்,!
கொலுசினிசைக்கேற்ப!
நர்த்தனமாடும் பாவாடைப்பூக்களுமாய்!
அவளின் ஈடில்லா அழகில்!
பொறாமை கொண்ட!
பிறை நிலவானது!
தோல்வி முகங்காட்டமறுத்து!
இருளுக்குள் புதையுண்டதே!
தேய்பிறைக்கு அடுத்து வரும்!
அமாவாசை ஆகும்...!
-ராம்ப்ரசாத், லண்டன்
ராம்ப்ரசாத், சென்னை