வாட்டும் நோயினால்!
வருத்தத்தில் அவன்-!
இறுகிய முகமும்!
குன்றிய உள்ளமுமாய்...!
நலம் விசாரிக்க!
வலம் வந்த மருத்துவர்!
இவன் இருக்கும் இடம்!
வந்து நின்றார்-!
வெளிர் உடையும்!
பளீர் சிரிப்புமாய்...!
'கலக்கம் விலக்கிடு!
காலத்தே குணமாவாய்!!
பரிந்துரைத்த பயிற்சிகளைப்!
பழகச் சலிப்பதேன் ?!
படுத்தே இருந்தால்!
அடுத்துநீ எழுந்து நடப்பது!
எப்போதாம்?' கேட்டார்!
புன்னகை பூத்தபடி.!
மீண்டும் சொன்னார்:!
'மலர்ச்சியுடன் மருந்துகளை!
உட் கொள்வாய்,!
உற்சாகமாய் இருந்திட்டாலே!
தேறிடலாம் விரைவாய்!'!
நம்பிக்கை ஊற்றினிலிருந்து!
நன்னீர் வழங்கிய!
திருப்தியுடன்!
திரும்பி நடந்தார்.!
'மிடுக்காக வந்து!
துடுக்காகச் சொல்லிவிட்டாரே,!
பட்டால் அன்றோ புரியும்!
வலியின் ஆழமும்-!
கதிகலங்கி நிற்குமென்!
உள்மனதின் கோலமும்!'!
தெளிக்கப்பட்டது பன்னீர் என்ற!
தெளிவில்லாமல வென்னீரென்றே!
நினைத்துச் சலிக்கின்றான்.!
வாழ்வோடு வலியும்!
காலத்தோடு கவலையும்!
கலந்ததுதான் மானுடம் என்பது!
இறைவனின் கணக்கு.!
இதில் எவருக்குத்தான்!
தரப்படுகிறது விதிவிலக்கு?!
சொன்னவரும் மனிதர்தான்!
அவருக்கும் இருக்கக்கூடும்!
ஆயிரம் உபாதை என்பதனை!
ஏனோ மறக்கின்றான்.!
ஆறுதலாய் சொல்லப்படும்!
வார்த்தைகள் கூட சிலருக்கு!
வெந்த புண்ணில் பாய்ச்சப்படும்!
வேல்களாய்த் தோன்றுவது!
வேதனையான விந்தை!!
துயரின் எல்லை என்பது!
தாங்கிடும் அவரவர்!
மனவலிமையைப்!
பொறுத்ததே!!
ஆயினும் கூட...!
'பாவம் பாவம்' எனப்!
பரிதவிப்பைப் பன்மடங்காக்கும்!
உற்றார் பலர் உத்தமராகிறார்.!
விரக்தியை விடச் சொல்பவர்!
வேதனை புரியாதவராகிறார்!!
சோதனைமேல் சோதனையென!
சோர்ந்தவனின் சோகத்தை!
மென்மேலும் சூடேற்றுபவர்!
மனிதருள் மாணிக்கமாகிறார்.!
மனதைரியத்துடன் இருக்கும்படி!
மனிதநேயத்துடன் மன்றாடுபவரோ!
அடுத்தவர் அல்லல்!
அறிய இயலாத!
அற்பப் பதராகிறார்!!
அக்கறையை அனுபவத்தை!
ஆக்கப் பூர்வமாய்!
நோக்கத் தெரியாமல்-!
அன்பை ஆறுதலை!
இனம் புரிந்து!
ஏற்கத் தெரியாமல்-!
இருக்கத்தான் செய்கிறார்!
சிலர்...!
அத்தகு!
இடம் அறிந்து!
மெளனிகளாகத்!
தெரியாமலேதான்!
பலர்

ராமலக்ஷ்மி