பளபளக்கும் பட்டுடையும்!
மினுமினுக்கும் நகைநட்டும்!
சரிகை இழையோடும்!
தலைப்பாகையுமாய்..!
அலங்கரித்த!
வெண்புரவிகளில்!
கம்பீரமாய் பெருமிதமாய்!
அரசத்தம்பதியர் வீற்றுவர-!
கண்நூறுதான் கண்டுமகிழ..!
ஊர்உலா முடிந்து!
உடைமாற்றி நகை களைந்து-!
நின்றார்கள் கூலிக்கு!
இன்றாவது கிடைக்குமாவென..!
கனைக்காத குதிரைக்குக்!
கால்களாய் இருந்த!
களைப்பு மிகுதியில்!
ராஜாவும்..!
செழிக்காத கலைக்குச்!
சேவகியாய்-!
மெய் வருத்திப்!
பொய்க் களிப்புடன்!
பவனிவந்த ராணியும்!!
ராமலக்ஷ்மி