பேரொளியொன்று!
வானில் தோன்றிய வேளையில்!
பிரபஞ்சமெங்கும் சிந்தியததன் மிச்சமாய்!
எண்ணற்ற நட்சத்திரங்கள்!
ஓரொளியிலிருந்து!
வந்த மூலம் அறியாமல்!
யார் உயர்வென்று!
எங்கெங்கினும் போர்க்களங்கள்!
மோதியது போதுமென்று!
வாதிட்டு அலுத்துப் போய்!
செய்வதறியாது கோள்கள்!
உலுக்கக் காத்திருக்கிறது உலகை!
ஒற்றை பேனாவின் மை!
வடிக்கப் போகும் தீர்ப்புகள்!
வெட்கப்பட்டு உதித்து!
வேதனையுடன் மறைகின்றார்!
நித்தம் சூரியசந்திரர்கள்!
ஒரேசக்தியாய் ஒளிர்கின்றார்!
அத்தனை கடவுளரும் எனும்!
புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்!!
[24 செப்டம்பர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட இருந்த அயோத்தி தீர்ப்புக்கு உச்சநீதி மன்றம் நான்கு நாட்களுக்கு இடைக்காலத் தடை.]
ராமலக்ஷ்மி