உடல் மட்டும்!
படுக்கையில் கி்டக்கும்!
மனம் எட்டு முறை!
உலகைச் சுற்றி வந்திருக்கும்!
மின்விசிறி சுழலும் வேகத்தில்!
திரைச்சீலைகள் காற்றில் பறக்கும்!
உறக்கமற்ற இரவுகள்!
நரகத்தை ஞாபகப்படுத்தும்!
சாளரத்தின் வழியே நிலா!
படுக்கையறையை!
குறும்புடன் எட்டிப் பார்க்கும்!
அர்த்த ஜாமத்தில் யாரோ!
கதவைத் தட்டுவது போன்ற பிரமை!
திடுக்கிட வைக்கும்!
பழிபாவத்துக்கு அஞ்சுபவன்!
உறக்கத்தை வரவழைக்க!
தூக்க மாத்திரைகயை நாட!
வேண்டியிருக்கும்!
பொய்யும், புரட்டும்!
நிறைந்த உலகில்!
கடவுள் கல்லாகாமல்!
என்ன செய்வார்!
மரணத்தை அச்சமின்றி!
எதிர்கொள்ள!
தனிமையில் இருந்து!
பழக வேண்டும்!
வாழ்க்கை நம்மை!
எங்கு கொண்டு போய்!
நிறுத்தும் என்று!
யாருக்கும் தெரியாது

ப.மதியழகன்