01.!
விட்டில் பூச்சிகள் !
------------------------!
நட்சத்திரங்களின்!
நகலா இருக்க!
ஏன் ஆசைப்படுகிறார்கள்!
உடல் மொழியைக் கூட!
காப்பியடிப்பது!
உங்கள் சுயத்தை!
அழிக்காதா!
உன் குரலை!
மிமிக்ரி பண்ணும் அளவுக்கு!
நீ வளர வேண்டாமா!
எத்தனை பேர்!
கூக்குரலிடுகிறார்கள்!
இயேசு இறங்கி வந்தாரா!
திரையரங்கிலேயே விட்டுவிட்டு!
வர வேண்டியதையெல்லாம்!
ஏன் சுமந்து கொண்டு திரிகிறாய்!
நிழலை நிஜமென்று!
நம்பியவர்களின் கதியெல்லாம்!
என்னவானது தெரியுமா!
கனவுக்குள் புகமுடியாது!
என்பதால் தானே!
அதற்கு கனவுலகம் என்று!
பெயர் வைத்திருக்கிறார்கள்!
கோடி என்றவுடன்!
ஏன் வாயைப் பிளந்து விடுகிறாய்!
தெய்வமே உன் வீட்டில் வந்து!
குடியிருக்கும் போது!
சில்லறை விஷயங்களுக்காக!
ஏன் வீணாய் அலைகிறாய்!
நீ சாதிக்கும் போது!
பார்த்துப் பெருமைபட!
குடும்பம் இருக்க!
வேண்டாமா!
பிறரது வாழ்க்கை மூலம்!
பாடம் கற்காவிட்டால்!
வாழ்க்கை நடுத்தெருவில்!
நிறுத்திவிடாதா. !
!
02.!
தவம் !
---------------!
கணினியின்!
கடவுச்சொல்லை மறந்தால்!
உறைந்து போக வேண்டாம்!
உள்ளே நுழைய!
ஆயிரம் வழிகள் உள்ளன!
பிச்சைக்காரனுக்காக!
சில்லறையைத் தேடி!
ஏமாற்றமடைய வேண்டாம்!
உனக்கும் சேர்த்து!
இரண்டு ரூபாயாக தட்டில்!
எவரேனும் போட்டுவிடுவர்!
மற்றவர்கள் செய்கையில்!
குறை காண வேண்டாம்!
படைப்பே குறையுடையது!
எனும் போது!
பந்தயத்தில் ஓடுவது போல!
நடந்து கொள்ள வேண்டாம்!
சின்ன சின்ன சந்தோஷங்களை!
தவறவிட்டுவிட நேரலாம்!
வரம் கொடுப்பவர் தலையில்!
கை வைப்பவர்களின் வலையில்!
வலியச் சென்று விழவேண்டாம்!
சிடுசிடுவென முகத்தை!
வைத்துக் கொள்ள வேண்டாம்!
குழந்தை உள்ளம்!
உடையவருக்கே!
சுவர்க்கத்தின் ராஜ்ஜியத்தில்!
இடமுண்டு என!
பைபிள் சொல்கிறது. !
03. !
பொக்கிஷம் !
--------------------!
சூரியனை நோக்கியே!
தலைசாய்க்கும் சூரியகாந்தி!
பழத்தை சுவைப்பவர்கள்!
எண்ணிப்பார்ப்பதில்லை!
மரத்தை வைத்தவர்!
எவரென்று!
இலை உதிர்த்த மரத்தை!
எவர் பார்க்க விரும்புவர்!
அவரவர் உலகத்தில்!
அவரவர் பத்திரமாய்!
பசியுடன் தூங்கும்!
பிச்சைக்காரனின் இரத்தத்தை!
குடிக்கும் கொசுக்கள்!
விதை எப்படி!
மண்ணைப் பிளக்கிறது!
எவரின் ஆணைப்படி!
கிழக்கு வெளுக்கிறது!
கோயில் உண்டியலில்!
போடும் காசை!
தர்மம் பண்ணினால்!
என்ன!
நாட்கணக்கில் வரிசையில் நின்று!
தரிசனம் செய்தால்!
வரம் கொடுத்துவிடுமா சாமி!
பாதாள அறைகளில்!
பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும்!
தட்டில் சில்லறை போட்டால் தான்!
சாமி கண்ணைத் திறக்கும்
ப.மதியழகன்