01.!
உழைப்பாளர் தினம்!
-------------------------!
உழைப்பாளர் தினமென்று உயர்வாகச் சொல்வோமே!
களைப்பிங்கு வந்தாலும் கவனமெலாம் உழைப்பில்தான்!
தொழிலெங்கள் இறையென்று தொழில்செய்து வெல்வோம்!
உழைப்பெங்கள் மூச்சென்று உழைக்கத்தான் செல்வோம்!
அயராது உழைத்திட்டால் அடைந்திடலாம் இலக்கினையே!
துயரமிங்கு வந்தாலும் தூள்தூள்தான் நம்முன்னே!
உயரத்தில் போனாலும் உணர்வெல்லாம் உழைப்பிலேதான்!
முயலாத மனிதர்காள் முன்னேற்றம் உழைப்பில்காண்!
எதுவந்த போதினிலும் எடுப்போமே முதலடியை!
பொதுவென்று வைப்போமே பொருளைத்தான் இங்கேயே!
விதியின்வழி செல்கின்ற வாழ்வுமிங்கு வசப்படுமே!
மதியிங்கு கூரானால் மகத்துவம் வாழ்வினிலே!
02.!
தாயென்பேன்!
------------------!
எல்லோரா சிற்பம்போல்!
எழிலான உனைக்கண்டு!
துள்ளாத மனமுந்தான்!
தரணிதனில் உண்டோடி?!
எல்லோரும் உனைப்போல!
எழிலென்று நான்சொல்ல!
என்னால்தான் முடியாது!
ஏனென்று நீகேட்டால்!
என்னவள்தான் நீயென்பேன் – என்!
இரண்டாவது தாயென்பேன்!
!
03.!
எப்படி?!
-------------!
என்னம்மா !
ஆடு வளர்க்கச் !
சொல்லிக்கொடுத்தாள்! !
மாடு வளர்க்கச் !
சொல்லிக்கொடுத்தாள்! !
நாய் வளர்க்கச் !
சொல்லிக்கொடுத்தாள்! !
கோழி வளர்க்கச் !
சொல்லிக் கொடுத்தாள்! !
கிளி வளர்க்கச் !
சொல்லிக்கொடுத்தாள்! !
பூனை வளர்க்கச் !
சொல்லிக்கொடுத்தாள்! !
இப்படி !
எல்லா உயிர்களின்மேலும் !
அன்பை வளர்க்கச் !
சொல்லிக் கொடுத்தவள் !
உன்மேல் மட்டும் !
காதலை வளர்க்கச் !
சொல்லிக் கொடுக்கவில்லையே! !
பிறகெப்படிடி !
உன்மீது என்மனதில் !
வளர்ந்தது காதல்?
முனைவென்றி நா சுரேஷ்குமார்