பறவையின் சிறகசைப்பில் - முனைவென்றி நா சுரேஷ்குமார்

Photo by Brian Kyed on Unsplash

இளைப்பாற இடம்தேடி!
ஓர் மரக்கிளையில் !
வந்தமர்கிறது !
அந்தப் பறவை.!
கூரிய அலகால் !
கோதிவிடுகிறது !
தன் சிறகை...!
அப்பறவை அமர்ந்திருந்த!
அந்த மரக்கிளை !
எப்போது வேண்டுமானாலும் !
முறிந்து விழலாம்.!
அப்பறவையை படிக்க !
வேடனுங்கூட !
குறிவைத்து வலை வீசலாம் !
விஷம் தடவிய அம்பை !
எய்யத் தயாராயிருக்கலாம்!
அம்மரத்தில் !
ஏற்கனவே குடியிருக்கும் !
இன்னபிற பறவைகளால் !
துரத்தியடிக்கவும் படலாம்!
அந்தப்பறவை...!
நச்சுப் பாம்புகளால் !
ஆபத்தும் நேரலாம் !
அப்பறவைக்கு...!
எவ்விதச் சலனமுமின்றி !
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு !
சுதந்திரக் காற்றை சுவாசித்தவாறே !
சிறகசைக்கத் துவங்குகிறது !
அந்தப் பறவை
முனைவென்றி நா சுரேஷ்குமார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.