ஏழை!
------------!
கரைந்தது காகம்!
விருந்தாளிகள் வரவில்லை!
ஏழையின் குடிசைக்கு!
மின்சாரம் தேவையில்லை!
நிலவொளி போதும்!
ஏழையின் குடிசைக்கு!
வயிற்றுவலி இல்லை!
வயிற்றில் ஈரத்துணி!
கண்ணீரில் ஏழை!
ஏழை சிரித்தான்!
இறைவனைக் காணவில்லை!
முதுமொழி பொய்யானது!
பணமழை பெய்தது!
ஏழை சிரித்தான்!
தேர்தல் வரவால்...!
கோடிகளில் ஊழல்!
கோடிகளில் வாழ்க்கை!
நாதியில்லாத் தமிழன்!
செல்போன் இலவசம்!
பிச்சைக்காரன் மகிழ்ந்தான்!
சா(வே)தனை இந்தியா!
அம்மனுக்கு கூழ் ஊற்றினார்கள்!
வயிறு நிறைந்தது!
ஏழைகளுக்கு!
வறுமையில் வாடாத!
உழவனையும் புலவனையும்!
பார்ப்பதரிது
முனைவென்றி நா சுரேஷ்குமார்