சிட்டுக்குருவியும் சிக்கனத்தார் வாழ்க்கையும் !
சிக்கனமாய் வீடுகட்டி சித்திரமாய் வாழ்ந்து கொண்டு !
பக்குவமாய் விண்ணேறிப் பாய்வதனால்- இக்கணமே !
சிட்டுக் குருவியாகும் சிக்கனத்து வாழ்க்கையரும் !
ஒட்டி உறவென்றாய் ஓது !
!
கேழ்வரகின் நெய்யும் கஞ்கரின் கையும் !
எடுக்கத்தான் பார்க்கத்தான் எந்நாளும் காணோம் !
வடிக்கத்தான் வைக்கத்தான் வந்தால் - தடுக்கித்தான் !
காணாது போனதுபோ கஞ்சரின்கை கேழ்வரகின் !
தேனான நெய்யென்றே தேடு !
எறும்பும் உழைப்பாளியும் !
தன்னெடைக்கு பல்மடங்கை தான்சுமையாய் து£க்குதலால் !
உன்னதமாய் ஓயாமல் ஓடுதலால் - நன்னயமாய் !
நள்ளிரவில் தூங்காரோ! நாளும் எறும்பாரே! !
வல்லள் உழைப்பவராம் வாழ்த்து !
வெளவாலும் பெருங்குடீகாரரும் !
கண்ணற்றக் காரணத்தால் கால்மேலாய் நிற்பதுவாய் !
புண்ணறவே போய்மோதும் போக்கினிலும் - மண்ணுலகில் !
வெளவாலை போலாகி வாட்டும் குடிகாரர் !
ஓவ்வாமல் ஒன்றென்றே ஓப்பு !
!
ஆக்கம்: சிங்கைத் தமிழ்க்கிறுக்கன் !
006594866439
சிங்கைத் தமிழ்க்கிறுக்கன்