என்புகள் நொருங்கிச்சிதைந்திருந்த!
நினைவு கனத்த பறவையின் நாட்களை!
புனைவுகளற்ற சொற்களால் நாம்!
கூறிக்கொள்வதற்க்காய் நீ!
விலங்குகளை பரிசளித்திருந்தாய்!
நாம் சபிக்கப்பட்ட கடவுளின்!
நகரத்திலிருந்து வந்திருந்தவர்களால்!
பணிந்துபோக மீளவும் பிரார்த்திக்கப்பட்டிருந்தோம்!
புதைந்த ஆன்மாக்களின்!
குருதி பிசுபிசுத்த கனவுகளை கிளறியபடி வந்திருந்த!
உருவம் தாங்கிய கோரங்களின்!
சுயபுராணங்களால் எம்!
புருவங்கள் வியர்த்துக்கொண்டிருந்தன!
தீய்ந்துபோன கனவுகளின்!
வெறுமை இரவுக்குள்!
கிளிக்கப்பட்ட நிர்வானப்பிண்டங்களோடு!
புணர்ந்து கொள்வதற்க்காய்!
அலைந்துகொண்டிருந்தவர்களின்!
கறைபடிந்த பற்களுள்!
உன் பொழுதுகளும் தேய்கிறது!
கனவுகள் பற்றி கூறும்போதெல்லாம்!
வியந்துபோக மட்டுமே முடிந்தது!
வலி நெருக்கிய மரணங்கள் பற்றி அறிந்திராத!
கடவுளின் நகரத்திலிருந்து வந்தவர்களால்!
வியந்துபோக மட்டுமே முடிகிற!
பிறிதொரு ஆத்மாவின் ஆரம்பமாய்,!
உன் இரவுகள் பூசியிருந்த கனவின்!
வர்ணங்களை சுரண்டிக்கொண்டிருந்தவர்களையும்!
தாண்டி நகர்கிறது குருதி
கிருத்திகன்